ads

தவறாக அனுப்பிய மெயிலை கையாள்வதற்காக ஜிமெயிலின் புதிய அப்டேட்

ஜிமெயிலில் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு புதியதாக Undo Send என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஜிமெயிலில் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு புதியதாக Undo Send என்ற அம்சம் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1.5 பில்லியன் பயனாளர்கள் உபயோகப்டுத்தி வரும் கூகுளின் ஜிமெயில் செயலியில் புதியதாக சிறப்பம்சங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி இனி, தவறாக அனுப்பிய மெயிலை திரும்பவும் பெற்று அதனை கையாள்வதற்கான இந்த அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் தற்போது ஆண்ட்ராய்டு மொபைல்களில் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டெஸ்டாப் மற்றும் ஆப்பிள் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் வழங்கப்பட்டிருந்தது. இதன் பிறகு ஒரு வழியாக தற்போது ஆண்டிராய்டு மொபைல்களுக்கும் வழங்கியுள்ளது. இதன் மூலம் தவறாக ஒரு மின்னஞ்சல் அனுப்பப்பட்ட பிறகு கீழே 'Undo Send' என்ற ஆப்சன் காண்பிக்கும். இதனை உபயோகப்படுத்தி தவறாக அனுப்பிய மின்னஞ்சலை மீண்டும் எடிட் செய்து கையாளலாம்.

இந்த அப்டேட்டை உபயோகப்படுத்த ஆண்டிராய்டு பயனாளர்கள் பிளே ஸ்டோருக்கு சென்று உங்களது ஜிமெயில் செயலியை அப்டேட் செய்து கொள்ளவும். மேலும் டெஸ்க்டாப்பில் ஜிமெயிலில் 8.7 வர்சனில் குறிப்பிட்ட நேரத்தை செட் செய்து, அந்த நேரத்திற்குள் தவறான மின்னஞ்சலை திரும்ப பெற்று கொள்ளலாம். இந்த அப்டேட்டும் விரைவில் ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு வழங்கவுள்ளனர். முன்னதாக ஆண்டிராய்டு பயனாளர்களுக்கு ஜிமெயிலில் 'Confidential Mode' என்ற அம்சம் வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதியதாக 'Undo Send' என்ற அம்சத்தையும் வழங்கியுள்ளது.

தவறாக அனுப்பிய மெயிலை கையாள்வதற்காக ஜிமெயிலின் புதிய அப்டேட்