ads

சர்ச்சைகளை ஏற்படுத்த கூடிய போலியான கணக்குகளை நீக்கி வரும் ட்வீட்டர்

ட்வீட்டர் நிறுவனம் வாரத்திற்கு 10 மில்லியன் போலியான கணக்குகளை அடையாளம் கண்டு வருகின்றது.

ட்வீட்டர் நிறுவனம் வாரத்திற்கு 10 மில்லியன் போலியான கணக்குகளை அடையாளம் கண்டு வருகின்றது.

பிரபல சமூக வலைத்தளங்களுள் ஒன்றான டிவிட்டர் செயலியானது, கடந்த 2006முதல் 12 வருடங்களாக உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. மாதத்திற்கு சுமார் 336 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்தி வரும் ட்வீட்டர் செயலியை சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் முதல் தொழில்துறை சார்ந்த பிரபலங்கள் வரை அனைவரும் உபயோகப்படுத்தி வருகின்றனர். இப்படி அனைத்து தரப்பு பிரபலங்களும் உபயோகப்படுத்தி வருவதால் அவர்களை சார்ந்த ரசிகர்களும் அதிகப்படியாக பயன்படுத்துகின்றனர்.

சர்ச்சைகளை ஏற்படுத்த கூடிய போலியான கணக்குகளை நீக்கி வரும் ட்வீட்டர்

இதனால் டிவிட்டர் செயலியில் பிரபலங்கள் போன்றே போலியான கணக்குகளும் அதிகப்படியாக உள்ளது. போலியான கணக்குகளில் பிரபலங்களின் ஒரே மாதிரியான புகைப்படங்கள் மற்றும் அதே பெயர் போன்ற விவரங்களும் இருப்பதால் ரசிகர்களும் அதனை உண்மை என நினைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் சர்ச்சைக்காக இது நான் இல்லை என்பது தெரிவிக்கும் விடீயோக்களும் அதிகமாக குவிந்து வருகிறது. போலியான கணக்குகளில் இருந்து வரும் கருத்துக்களை பிரபலங்களின் கருத்துக்கள் என்று நம்புவதால் அரசியல் மற்றும் சினிமா சார்ந்த துறைகளில் பெரும் சர்ச்சையை கிளப்பி விடுகிறது.

சர்ச்சைகளை ஏற்படுத்த கூடிய போலியான கணக்குகளை நீக்கி வரும் ட்வீட்டர்

சர்ச்சைகளை ஏற்படுத்துவது ஒரு புறம் இருந்தாலும் போலியான கணக்குகளை வைத்துபலமுறை ஹேக்கிங் சம்பவங்களும் நடந்து வருகின்றன.இதனால் தொடர்ந்து டிவிட்டர் நிறுவனத்திற்கு புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதனை சரிக்கட்டும் முயற்சியில் டிவிட்டர் நிறுவனம் தற்போது தீவிரமாக களமிறங்கியுள்ளது. இது குறித்து டிவிட்டர் நிறுவனம் கூறுகையில் 'போலியான கணக்குகளை ஒழிக்க எங்களது பாதுகாப்பினை விரிவுபடுத்தியுள்ளோம். ஒரே மாதிரியான விவரங்கள், விதிமுறைகளை மீறும் கருத்துக்கள், ஹேக்கிங் செய்ய ஏதுவாக உள்ள கணக்குகள், பொது மக்களை வன்முறைக்கு தூண்டும் கருத்துக்கள், ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட கணக்குகள் போன்ற தகவல்களை வைத்து போலியான கணக்குகளை நீக்கி வருகிறோம்.

இது மட்டுமல்லாமல் தேர்தல்கள் மற்றும் அரசியல் சார்ந்த புகைப்படங்கள் மற்றும் தவறான தகவல்களை கொண்டுள்ள அரசியல் கட்சிகள் சார்ந்த கணக்குகளை நீக்கி வருகிறோம். இதனால் வாரத்திற்கு மில்லியன் கணக்கில் போலியான மற்றும் விதிமுறைகளை மீறும் கணக்குகள் சிக்குகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒவ்வொரு வாரமும் 9.4 மில்லியன் அளவில் போலியான கணக்குகள் குவிந்தன. இது பெரும் சவாலாகவே உள்ளது. ஆனால் இதனை விரைவில் சரி செய்து விடுவோம்" என்று டிவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளை ஏற்படுத்த கூடிய போலியான கணக்குகளை நீக்கி வரும் ட்வீட்டர்