ads

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்

தற்போது பொது மக்கள் புலம்பும் முக்கால் வாசி  புலம்பல்களுக்கு காரணம் ஸ்பேம் அழைப்புகள் அதாவது தேவையற்ற அழைப்புகள் தான். நாள் தவறாமல் வீட்டிலிருந்து அழைப்புகள் வருதோ இல்லையோ இந்த ஸ்பேம் அழைப்புகள் எண்ணிக்கை நாளைக்கு குறைந்தது 5 முறையாவது வந்துவிடுகிறது. இது ஒருபுறம் வேடிக்கையாக இருந்தாலும் இந்த ஸ்பேம் அழைப்புகளால் செல்போன் பயனாளர்கள் அனைவருமே கடும் கோபத்தில் உள்ளனர்.

சில சமயங்களில் இந்த ஸ்பேம் அழைப்புகளால் விபத்துக்கள் கூட ஏற்படுகின்றன. இந்நிலையில் ட்ருகாலர் நிறுவனம் ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நம்மை விடவும் கடும் கோபத்தில் பிரேசில் நாட்டினர் உள்ளனர். ஏனென்றால் இந்த பட்டியலில் பிரேசில் தான் முதலிடம் பிடித்துள்ளது.

இந்தியாவில் வரும் மொத்த அழைப்புகளில் 6 சதவீதம் ஸ்பேம் அழைப்புகளாக உள்ளது. கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டு இந்தியாவில் ஸ்பேம் அழைப்புகள் 1.5 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பட்டியலில் பிரேசில், இந்தியாவை தொடர்ந்து சிலி, தென் ஆப்பிரிக்கா மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் டாப் 5 வரிசையில் இடம் பிடித்துள்ளன.

மேலும் குறிப்பாக இந்த ஸ்பேம் அழைப்புகளில் 91 சதவீதம் அளவிற்கு  டெலிகாம் நிறுவனங்களின் அழைப்புகள் இடம்பிடித்துள்ளது. பேலன்ஸ் அறிய, ரீசார்ஜ் செய்ய, புது சலுகைகளை அறிவிக்க, மார்க்கெட்டிங் போன்ற பல காரணங்களுக்காக பொது மக்களின் நம்பரை வைத்து கொண்டு இவர்கள் செய்யும் அட்டகாசங்களால் சில பேர் கடுப்பாகி செல்போனையே உடைத்து விடுகின்றனர். 

ஸ்பேம் அழைப்புகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடம்