ads

2020ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கும் ஜியோ

ஜியோவின் 5ஜி நெட்வொர்க் சேவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஜியோவின் 5ஜி நெட்வொர்க் சேவை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வந்ததில் இருந்து இந்திய தொலைத்தொடர்பு துறையில் பல மாறுதல்கள் நடந்துள்ளது. இதர தொலைத்தொடர்பு நிறுவனங்களும் ஜியோவுக்கு ஈடு கொடுக்கும் விதமாக தமது வாடிக்கையாளர்கள் பல சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த போட்டியில் ஜியோவுடன் ஈடுகொடுக்க முடியாத நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. ஆனாலும் ஜியோ தொடர்ந்து இந்தியாவில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகிறது.

2020ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கும் ஜியோ

தற்போது வழங்கி வரும் 4ஜி இன்டர்நெட் சேவையின் வேகத்தை அதிகரிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது 4ஜி சேவையை தொடர்ந்து 5ஜி சேவையையும் விரைவில் ஜியோ அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற உள்ளது.

2020ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கும் ஜியோ

இதன் பிறகு அடுத்த ஆறே மாதத்தில் அதாவது 2020ஆண்டின் ஏப்ரல் அல்லது மே மாதத்திற்குள் ஜியோ தனது 5ஜி சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது. 4ஜி சேவையில் தற்போது வழங்கி வரும் இன்டர்நெட் வேகத்தை விட 5ஜி சேவையில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க உள்ளது. இதனால் ஐந்தாம் தலைமுறைக்கான LTE நெட்வொர்க்கை தயார் நிலையில் வைத்துள்ளது. இந்தியாவில் 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டால் அதனை தாக்கு பிடிக்கும் அளவிற்கு தொழில்நுட்ப சாதனங்கள் வெளிவர வேண்டும். 

2020ஆம் ஆண்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்கும் ஜியோ