ads

டிஜிட்டல் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை: பேடிஎம் அறிவிப்பு

பேடிஎம்

பேடிஎம்

டிஜிட்டல் பேமென்ட் நிறுவனமான பேடிஎம் தனது இ-வாலட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித பரிவர்த்தனைக் கட்டணங்களையும் வசூலிக்கும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது மேலும்  பேடிஎம் தளங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யும் பயனர்களுக்கு கூடுதல் தொகை வசூலிக்கப் போவதாக வெளியான அறிக்கைகளை அனைத்தும் மறுத்துள்ளது. 

ஒன்97 கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்த உரிமை கொண்ட பேடிஎம் பயன்பாடு அல்லது பேடிஎம் கேட்வே பயன்பாடு, கார்டுகள், யுபிஐ, நெட் பாங்கிங் மற்றும் வாலட் மூலம் பணம் செலுத்தும் தங்கள் பயனர்களுக்கு எவ்விதமான பரிவர்த்தனைக் கட்டணத்தை வசூலிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம் என  பேடிஎம் தெரிவித்துள்ளது.

நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட அந்த நிறுவனம், பேடிஎம் வாடிக்கையாளர்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி தளத்தில் கிடைக்கும் அனைத்து சேவைகளையும் தொடர்ந்து பயனர்கள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. ஜூலை 1 முதல் பேடிஎம் கிரெடிட் கார்டுகள் வழியாக பணம் செலுத்துவதில் 1 சதவீதம், டெபிட் கார்டுகளுக்கு 0.9 சதவீதம் மற்றும் நெட் பாங்கிங் மற்றும் யுபிஐ அடிப்படையிலான முறைகள் மூலம் 12-15 சதவீதம் வரை பரிமாற்ற கட்டணம் வசூலிக்கும் என செய்தித்தாளில் செய்தி ஒன்று வெளியானது.

இ-வாலட் மூலம் பணத்தை சேர்க்கும்போதும், ​​ பில்கள் செலுத்துதல் மற்றும் திரைப்பட டிக்கெட்டுகளை வாங்கும் போதும் மட்டுமே கட்டணம் பொருந்தும் என்று அறிக்கை மேலும் தெரிவித்தது.

கிரெடிட் கார்டு கட்டணங்களை உள்வாங்காத கல்வி நிறுவனங்கள் அல்லது பயன்பாட்டு சேவை வழங்குநர்கள் போன்ற சில வணிகர்கள் உள்ளனர், மேலும் வாடிக்கையாளர்களும் அதனையே பின்பற்ற வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறார்கள் என்று டிஜிட்டல் பேமென்ட் நிறுவனம் கூறியுள்ளது. 

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், இவ்வாறான கட்டணங்களைத் தவிர்ப்பதற்காக தங்கள் பயனர்களை அவர்களது டெபிட் கார்டுகள் மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்த பரிந்துரை செய்துள்ளனர். எந்தவொரு சூழ்நிலையிலும் இந்த கட்டணங்கள்  பேடிஎம் மூலமாக வசூலிக்கப்படவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம், என்று நிறுவனம் கூறியுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு கட்டணத்தையும் வசூலிக்கும் திட்டமும் இல்லை எனவும் தெளிவுற எடுத்துரைத்துள்ளது. 

டிஜிட்டல் கட்டணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை: பேடிஎம் அறிவிப்பு