ads

பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோளை ஆராய ஜப்பான் அனுப்பிய ரோவர் விண்கலம்

குறுங்கோளை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய துள்ளல் வகை ரோவர்கள் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

குறுங்கோளை ஆராய்வதற்காக ஜப்பான் அனுப்பிய துள்ளல் வகை ரோவர்கள் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

நமது சூரிய குடும்பத்தினுள் 8 கிரகங்களுடன் ஏராளமான குறுங்கோள்களும் சூரியனை சுற்றி வருகின்றன. பூமிக்கு அருகே உள்ள குறுங்கோள்களுள் ஒன்று ரியூகு (Ryugu). இந்த குறுங்கோளை 1999ஆம் ஆண்டில் லீனியர் திட்டம் மூலம் கண்டுபிடித்தனர். இதன் பிறகு இந்த குறுங்கோளை ஆராய்ச்சி செய்யும் பணியில் ஜப்பானை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஜாக்ஸா நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருகிறது.

பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோளை ஆராய ஜப்பான் அனுப்பிய ரோவர் விண்கலம்

இதற்காக இரண்டு துள்ளல் வகை ரோவர் அடங்கிய செயற்கைக்கோளை கடந்த ஜூன் 27ஆம் தேதி விண்ணில் ஏவியது. தற்போது இந்த ரோவர்கள் வெற்றிகரமாக ரியூகு (Ryugu) என்ற குறுங்கோளில் பாதுகாப்புடன் தரையிறங்கியதாக ஜாக்ஸா தெரிவித்துள்ளது. தரையிறங்கியவுடன் ரோவர் விண்கலம் அனுப்பிய புகைப்படங்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஜாக்ஸா வெளியிட்டுள்ளது.

பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோளை ஆராய ஜப்பான் அனுப்பிய ரோவர் விண்கலம்

இந்த ரோவர்கள் ரியூகு (Ryugu) குறுங்கோளில் உள்ள மண்வகைகளை ஆய்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த ரோவர்கள் அனுப்பிய முதல் புகைப்படம் சற்று தெளிவாக இல்லாமல் இருந்தது. ரோவர்கள் தொடர்ந்து சுற்றி கொண்டே இருப்பதால் புகைப்படம் தெளிவில்லாமல் இருப்பதாகவும் ஜாக்ஸா தெரிவித்திருந்தது. இதன் பிறகு ரோவர் அனுப்பிய அடுத்தடுத்து புகைப்படங்களையும் ஜாக்ஸா வெளியிட்டுள்ளது.

பூமிக்கு அருகில் உள்ள குறுங்கோளை ஆராய ஜப்பான் அனுப்பிய ரோவர் விண்கலம்