ads

ஹுவாய் தடைக்கு பின்னர் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பு

ஆப்பிள் ஐபோன் உற்பத்தி

ஆப்பிள் ஐபோன் உற்பத்தி

அமெரிக்க-ஹுவாய் வர்த்தக பதற்றம் காரணமாக, ஆப்பிள் ஐபோன் பாகங்கள் மற்றும் ஏற்றுமதிகள் இம்மாதத்தின்  இறுதி காலாண்டில் 40 மில்லியன் யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது முதலில் 39 மில்லியனாக மதிப்பிடப்பட்டு இருந்தது.

டிரம்ப் நிர்வாகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவிலிருந்து ஹுவாய் போன்ற நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் பாகங்கள் விற்பனையை தடை செய்துள்ளது. இதன் விளைவாக அதிகரித்த தேவையால் ஆப்பிள் நிறுவனம் பதிலளிக்கும் வகையில் செயல்படுகின்றது என  ஆராய்ச்சி அறிக்கை பதிப்பகத்தார் கோவன் கூறியுள்ளார்.

கணிப்புகளின்படி, ஜூன் மாத இறுதி காலாண்டில் சுமார் 30 மில்லியன் யூனிட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.  ஐபோன் உற்பத்தியில் 75 சதவீதம் ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் ஐபோன் எக்ஸ்எஸ் மேக்ஸ் மாடல்களில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகின்றது. மீதமுள்ளவற்றில் பெரும்பாலானவை ஐபோன் 7 மற்றும் ஐபோன் 8 மாடல்களில் உற்பத்தி ஆகி உள்ளது என செய்தி வலைத்தளம் ஆப்பிள் இன்சைடர் தெரிவித்துள்ளது.

ஹுவாய் தடைக்கு பின்னர் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பு

இருப்பினும், தற்போது நடைபெற்று வரும் வர்த்தக பதற்றம் ஐபோன் தயாரிப்பாளருக்கு நீண்ட காலத்திற்கு பயனளிக்காது. ஏனெனில் ஹுவாய் நிறுவனம் தனது மொபைல் ஓஎஸ்ஸை சீனா வாடிக்கையாளர்களுக்காக ஆரம்பத்தில் வெளியிடும். பின்னர் பிற சந்தைகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் படி, சீனா சந்தையில் 2019 ஆம் ஆண்டின்  முதல் காலாண்டு பகுதியில் ஒன்பது சதவீத மார்க்கெட் பங்கு பெற்று ஆப்பிள் நிறுவனம் போராடி வந்தது. 2018 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் 12 சதவீத பங்கு பெற்று இருந்தது. அதையே கால கட்டத்தில் ஹுவாய் நிறுவனத்தின் மார்க்கெட் பங்கு 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஐபோன் தயாரிப்பாளர் இந்த ஆண்டில் மூன்று புதிய ஐபோன்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. ஆய்வாளர் மிங்-சி குவோவின் கூற்றுப்படி, ஐபோன் நிறுவனம் இந்த ஆண்டு  6.1 அங்குல ஐபோனை 100 மில்லியன் யூனிட்டுகளை விற்பனை செய்வதையே நோக்கமாகக் கொண்டுள்ளது என கூறியுள்ளார்.

ஹுவாய் தடைக்கு பின்னர் ஆப்பிள் ஐபோன் உற்பத்தி அதிகரிப்பு