ads

இன்டர்நெட்டின் ஆதிக்கத்தினால் டிடிஎச் சேவைக்கு ஏற்படும் ஆபத்து

இன்டர்நெட்டின் ஆதிக்கத்தினால் டிடிஎச் சேவைக்கு ஏற்படும் ஆபத்து

இன்டர்நெட்டின் ஆதிக்கத்தினால் டிடிஎச் சேவைக்கு ஏற்படும் ஆபத்து

சில மாதங்களுக்கு முன் டிடிஎச் சேவைக்கான மாதாந்திர தொகை மற்றும் நாம் காண விரும்பும் சேனல்களுக்கு தனி தனி கட்டணத் தொகையை மட்டும் செலுத்தி மாத கட்டணத்தை குறைத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பிற்கு வரவேற்பும் எதிர்ப்பும் கிளம்பியது. எந்த ஒரு தொழில்நுட்ப சேவைகள் வந்தாலும் அதில் குறைகள் இருக்கத்தான் செய்கிறது.

இந்நிலையில் தற்பொழுது விற்பனையில் உள்ள பெரும்பாலான டிவிகள் இன்டர்நெட் வசதிகளுடன் இருப்பதால், சுலபமாக இன்டர்நெட் மூலம் பல நிகழ்ச்சிகளை காண முடிகிறது. வீட்டில் நாம் உபயோகிக்கும் டிவிகள் பலசாக இருந்தால் அதில் அமேசான் பைர் ஸ்டிக் மூலம் இன்டர்நெட் டிவிகளாக மாற்றிக்கொள்ளலாம். 

இந்த சூழ்நிலையில்தான் இன்டர்நெட்டின் ஆதிக்கம் டிடிஎச் சேவைகளை பின்னுக்கு தள்ளுவது மட்டுமில்லாமல் டிடிஎச் சேவையே இல்லாமல் போவதற்கான நிலை ஏற்படவாய்ப்புள்ளது. பெரிய நகரங்களில் இன்டர்நெட் சேவைகள் பெருமளவு வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வளர்ச்சியினால், மாதம் பத்து   ஜிபி வரை பெற்றிருந்த மக்கள், இன்று மாதம் ஆயிரம் ஜிபி வரை கிடைக்கிறது. இதனால் மக்கள் எந்தத்ந்த வகையில் இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த முடிகிறதோ, அனைத்திலும் பயன் படுத்துகிறார்கள் 

அதில் முக்கிய பங்கு வகிக்கும் சாதனங்கள் டிவி மற்றும் கைபேசிகள். அணைத்து ஸ்மார்ட் டிவிகளிலும் யூடுப், நெட் பிலிக்ஸ் மற்றும் அமேசான் ப்ரைம் அப்ப்ளிகேஷன்ஸ் உள்ளது. இந்த ஆப்கள்  மூலம் திரையில் வெளிவந்த புதிய திரைப்படங்கள், பழைய திரைப்படங்கள் சிறிய தொகையை செலுத்தினால் பார்க்க முடியும். அமேசான் ப்ரைம் மற்றும் நெட் பிலிக்ஸ் போன்ற நிறுவனங்கள் மாத கட்டணம் அல்லது வருடாந்திர கட்டணம் மூலம், அணைத்து படங்களையும் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் பார்க்கலாம். அது மட்டுமில்லாமல் குறிப்பிட்ட சில படங்களை தயாரிப்பாளர்களிடேம் இருந்து வாங்கி தங்களது அப்ப்ளிகேஷனில் வெளியிடுகிறார்கள், இவ்வகையான படங்கள் திரையரங்குகளில் வருவதில்லை.

அணைத்து செய்தி நிறுவனங்களும் தங்களது விடீயோக்களை தங்களின் தனிப்பட்ட சேனல்களில் மட்டுமில்லாமல் யூடியூபில் பதிவேற்றம் செய்கிறார்கள். சில தொலைக்காட்சி தொடர்களின் தயாரிப்பு நிறுவனங்கள் யூடியூபிலும் வெளியிடுகிறார்கள். எந்த ஒரு முடிந்த தொலைக்காட்சி தொடராக இருந்தாலும், எந்த நேரத்திலும் நாம் டிடிஎச் வசதி இல்லாமல் இன்டர்நெட் மூலம் மொபைலிலோ அல்லது ஸ்மார்ட் டிவிகளில் பார்த்து கொள்ளலாம். இப்படி பார்ப்பதற்கு தேவையான ஒன்று அதிவேக இன்டர்நெட் வசதி  மட்டுமே, தற்பொழுது அணைத்து நகரங்களிலும் கிடைக்கின்றது.

இவ்வாறு தொழில்நுட்ப வசதிகள் பெருகும்போது பிரபலமடைந்த சில தொழில்நுட்பங்கள் காணாமல்போகிறது. இதை நன்கு அறிந்த சில டிடிஎச் நிறுவனங்கள் இன்டர்நெட் மூலம் சேவையை தொடங்கி அவகைளை பிரபலமடைய செய்யும் வேளைகளில் உள்ளது.

இன்டர்நெட்டின் ஆதிக்கத்தினால் டிடிஎச் சேவைக்கு ஏற்படும் ஆபத்து