ads

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

இணைய உலகில் முடிசூடா மன்னனான கூகுள், 1998ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் தன்னுடைய ஆதிக்கத்தை ஆரம்பித்தது. இதன் பிறகு உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் 20 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் 4இல் கூகுள் தனது 20ஆம் ஆண்டு பிறந்த நாளை கொண்டாடியது.கூகுள் தனது பயனாளர்களை கவர அறிமுகப்படுத்தப்பட்ட அம்சங்களில் ஒன்று கூகுள் டூடுல்.

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

கூகுள் டூடுல் மூலம் அன்றைய நாள் முக்கியமான வரலாற்று நினைவுகளை தனது பயனாளர்களுக்கு நினைவுபடுத்தும். இந்த கூகுள் டூடுலில் அந்த நினைவிற்கான குறிப்பிட்ட ஓவியமும் இடம் பெரும். தற்போது இந்த கூகுள் டூடுல் ஓவியத்திற்காக பள்ளி மாணவர்களுக்கு போட்டி ஒன்றை நடத்தியுள்ளது. இந்த போட்டி மூலம் மாணவர்கள் தங்களது கலை திறமையை வைத்து கூகுள் டூடுல் ஓவியத்தை வரைந்து கூகுளுக்கு அனுப்ப வேண்டும்.

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

மாணவர்கள் வரும் அக்டொபர் 6ஆம் தேதி காலை 10 மணிக்குள் தங்களுடைய ஓவியத்தை அனுப்ப வேண்டும். மாணவர்கள் அனுப்பிய கூகுள் டூடுல் ஓவியத்தில் சிறந்ததை கூகுள் பயனாளர்கள் தேர்வு செய்வார்கள். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல பரிசுகள் காத்திருக்கின்றது. இந்த போட்டியில் சிறந்த கூகுள் படங்கள் ஐந்து பிரிவுகளில் தேர்வு செய்யப்படும். இதில் 20 சிறந்த படங்கள் கூகுளின் இணையத்தில் காண்பிக்கப்படும்.

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி

இந்த போட்டியில் வெற்றி பெரும் மாணவர்களுக்கு தேசிய விருது, சான்றிதழ், இந்தியா கூகுள் நிறுவனத்தின் அலுவலகத்தினை காணும் வாய்ப்பு மற்றும் 5 லட்சம் பரிசு போன்ற பல சுவாரிஷ்யமான பரிசுகளும் வழங்குகிறது. மாணவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகள் மூலம் கூகுள் டூடுல் வரைபடத்தை வரைந்து கூகுள் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிக்காட்ட கூகுள் நல்ல வாய்ப்பினை அளித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு  கூகுள் டூடுல் போட்டி

மாணவர்களுக்கு கூகுள் டூடுல் போட்டி