ads

ஹவாய் போன் வாடிக்கையாளர்களுக்கு பதிலளித்த கூகிள் ஆண்ட்ராய்டு

ஹவாய் போன்

ஹவாய் போன்

ஹவாய் அண்ட்ராய்டு சாதனங்களில் தற்போதைய பயனர்கள் தொடர்ந்து கூகுள் ப்லே ஸ்டார் பயன்பாட்டை  பயன்படுத்தலாம் என்று கூகுல் அறிவித்துள்ளது. உலகளாவிய ஹவாய் உபயோகிதர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய செய்தியாக இருந்தாலும் சீனா தொழில்நுட்ப நிறுவனங்கள்  இப்பயன்பட்டினை முழுமையாக செயல்ப்படுகின்ற ஆண்ட்ராயிடை வரும் கைபேசிகளில் பயன்படுத்த முடியுமா என்ற சந்தேகத்தை எழுப்புகின்றது.

தற்போது ஹவாய் பயனர்கள் கூகுள் ப்லே ப்ரோடெக்ட் மூலம் வழங்கப்படும் பாதுகாப்பு அம்சங்களை  அனுபவிக்க இயலும் என்று  நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.  கூகுள் ப்லே ப்ரோடெக்ட் என்பது ஒரு உள்ளமைக்கப்பட்ட தீம்பொருள் கண்டுபிடிப்பு ஆகும், இது முறை இல்லாத, தேவை இல்லாத பயன்பாடுகளை கண்டறிந்து மற்றும் அவற்றை களைவதற்கு ஒரு இயந்திரமாக பயன்படுகிறது. ஹவாய் சாதனங்கள் எதிர்காலத்தில் புதுப்பித்து வரும் ஆண்ட்ராய்டு வசதிகளை பெற முடியுமா என்று கூகுல் எந்த வித குறிப்பையும் கூறவில்லை.

கூகுல் நிறுவன தற்காலிகமாக ஹவாய் நிறுவனத்துடன் வணிகத்தை நிறுத்தி உள்ளது. ஹவாய் உலகிலேயே  இரண்டாவது கைபேசி தயாரிக்கும் நிறுவனமாக உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் 200 மில்லியன் கைப்பேசிகளை தயாரித்து பல நாடுகளுக்கு அனுப்பி தனது வர்த்தகத்தை மேம்படுத்தி உள்ளது. மேலும் ரூடர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஹுவாயிலிருந்து எதிர்கால ஆண்ட்ராய்டு சாதனங்களில் கூகுல் கைபேசி் சேவைகளை இயங்காது என்றும் , ப்லே ஸ்டார் மின்னஞ்சல் அனுப்பும் ஜிமெயில் உட்பட பயன்படுத்த முடியுமா என்று கூகுல் அறிவிக்கவில்லை என்று அறிக்கை மூலம் அறியப்படுகிறது. ஹுவாயின் செய்தித் தொடர்பாளர் நிறுவனத்தின் நிலைமையைக் கவனித்து வருகின்றோம் ஆனால் அதற்கு அப்பால் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்றார்.

அடுத்த சில வாரங்களில் இதற்கான தீர்வு காணப்படவில்லை என்றால்  சீனாவுக்கு வெளியே ஹவாய் நிறுவத்தின் வர்த்தகம் கணிசமாக குறைய வாய்ப்புகள் பல உள்ளன. ஏற்கனவே முன்னணியில் இருக்கும் ஆண்ட்ராய்டு கைப்பேசி  விற்பனையாளர், ஏற்கனவே பாதுகாப்பு காரணங்களை கொண்டு சர்சைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இப்பிரச்னைக்கு எந்த வித தீர்மானமும் கொண்டு வரவில்லை என்றால் எதிர்கால கைபேசிகளில் இருக்கும் மென்பொருள்  தந்திரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டி இருக்கும். இவ்வாறான நடவடிக்கையால் உற்பத்தி பற்றாக்குறை அல்லது விநியோகத்தில் தாமதம் ஏற்படும் மேலும் நிறுவத்தின் நற்பெயர் பாதிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும். கூகுல் கூறிய விதிகளுக்கு  இசைந்து கொடுத்து இது சம்மந்தமாக மேலாய்வு செய்கிறோம் என ஒரு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தற்போதைய அமெரிக்கா-சீனா வர்த்தகப் போரால் வளர்ச்சி கொண்ட இரு தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த மோசமான சூழலில் நிறுவனம் இருப்பதை அறிந்துள்ளனர். ஹவாய் மற்றும் அதன் 70 துணை நிறுவனங்களுள்  தேசிய பாதுகாப்பு சம்பந்தமான அமெரிக்க வர்த்தகத் துறையால் நிறுவன பட்டியலில் சேர்க்கப்பட்டு கூகுல் மற்றும் இன்டல் போன்ற உள்ளூர் நிறுவனங்களை சீன நிறுவனத்துடன் வணிகம் நடத்துவதற்கு முன்னர் அரசாங்கம் ஒப்புதல் பெற வேண்டும் என்று கோருக்கின்றது.

ஹவாய் நிறுவனம் இதனை முன்பே கணித்துள்ளது. நிர்வாகத்தின் நிர்வாகி ஒருவர், ஹூவாய் நிறுவனம் தனக்கென ஒரு ஆண்ட்ராய்டு இயக்க முறைமை உருவாக்கி உள்ளதாகவும் அதனை வரும் காலத்தில் உபயோகிக்கப்படும் என்றும் அறிவித்தார். தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு உபயோகத்தில் தடை ஏற்பட்டால் வளர்ந்து வரும் முறைமையை பயன்படுத்த இயலும் என்று கூறினார். ஹவாய், எ.ஓ.எஸ்.பி எனப்படும் ஆன்ட்ராய்டு ஓபன் சோர்ஸ் எனும் இயக்கு முறைமையை வைத்து தனது சேவையை தொடர முடியும் மேலும் அது தனக்கென ஒரு ஆப் ஸ்டோரையும் கொள்ளலாம் என தெரிவிக்கின்றது. ஹவாய் தனி ஆப் ஸ்டோரை வைத்து தொடர் சேவைகளை வழங்கி தனது பங்கீட்டாலர்களை திருப்தி படுத்துமா என்பது சவலாகத்தான் இருக்கும்.

ஹவாய் போன் வாடிக்கையாளர்களுக்கு பதிலளித்த கூகிள் ஆண்ட்ராய்டு