தற்பொழுது மொபைல் வாடிக்கையாளர்களிடம் அதிகம் எதிர்பார்பை உருவாக்கி இருப்பது சாம்சங் நிறுவனத்தின் புதிய வெளியீடான நோட் 9 மொபைல். ஆகஸ்ட் 9ஆம் தேதி அமெரிக்காவில் லான்ச் செய்த நாள் முதல் இன்றுவரை முன்பதிவில், இதற்கு முந்தய மாடலைவிட அதிக முன்பதிவு நடந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மிக குறைந்த விலையில் நோட் 9 மாடலை வாங்க உங்கள் பழைய மாடலை குறைந்தது ரூபாய் 7,000 விற்கலாம் மற்றும் பழைய மாடலை மாற்றுவதற்காக சாம்சங் நிறுவனம் ரூபாய் 6,000 கூடுதலாக சலுகை அளிக்கிறது. இதனால் நீங்கள் குறைந்தது ரூபாய் 12,000 வரை சலுகைகள் பெறலாம். மேலும் நீங்கள் HDFC கிரெடிட் கார்ட் வைத்துஇருந்தால், வங்கியின் சலுகை அறிவிப்பின்படி ரூபாய் 6,000 திரும்ப பெறலாம்.
HDFC வங்கியின் சலுகை மற்றும் சாம்சங் சலுகை மூலம் நீங்கள் ரூபாய் 18,000 வரை சேமிக்கலாம். சாம்சங் நிறுவனம் மற்றொரு அதிரடி சலுகையாக ரூபாய் 22,990 மதிப்புள்ள கியர் ஸ்பார்ட் வாட்ச் வெறும் ரூபாய் 5,000 பெறலாம். இதனால் ரூபாய் 35,990 வரை பணத்தை மிச்ச படுத்தலாம்.

