ads

ஜியோ போனில் வாட்சப்பை பயன்படுத்த சொல்லி தரும் ஜியோ வண்டி

வாட்சப் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜியோ போனில் வாட்சப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு சொல்லி தர ஜியோ வண்டியை அனுப்ப முடிவு செய்துள்ளது.

வாட்சப் மற்றும் ஜியோ நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஜியோ போனில் வாட்சப்பை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு சொல்லி தர ஜியோ வண்டியை அனுப்ப முடிவு செய்துள்ளது.

ஜியோ போன் வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த வாட்சப் சேவையை அனைத்து ஜியோ போன் மற்றும் ஜியோ போன் 2 பயனாளர்களுக்கும் வழங்கியுள்ளது. கையடக்க மாடலான ஜியோபோனின் வடிவமைப்பிற்கேற்ப வாட்சப் செயலியை பிரத்யேகமாக உருவாக்கியுள்ளனர். ஆண்டிராய்டு தலத்தில் உபயோகப்படுத்துவதை விட ஜியோ போனில் வாட்சப்பை உபயோகப்படுத்த மிகவும் எளிதாக இருக்கும் என முகேஷ் அம்பானி தெரிவித்திருந்தார்.

இந்த அம்சம் தற்போது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களிடம் சென்றடைந்துள்ள நிலையில் சில பேருக்கு வாட்சப் செயலி ஜியோ போனில் இயங்கவில்லை என்று தெரிவித்து வருகின்றனர். இது குறித்த புகார்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால் ஜியோ போனில் ஏற்படும் வாட்சப் குறைபாடுகளை தவிர்க்க வாட்சப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்கள் இணைந்து வாட்சப் ஜியோ வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ போனில் வாட்சப்பை பயன்படுத்த சொல்லி தரும் ஜியோ வண்டி

ஒரு வேன் மூலம் நாடு முழுவதும் 10 நகரங்களுக்கு சென்று ஜியோ போனில் வாட்சப்பை எப்படி உபயோகப்படுத்த வேண்டுமென்று மக்களுக்கு எடுத்துரைக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் அக்டொபர் 9ஆம் தேதி முதல்  உத்திரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் முதலில் ஜியோ வண்டியை அனுப்ப முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு தென் மாநிலங்களை வந்தடைய உள்ளனர். நாடு முழுவதும் ஜியோ போன் வாடிக்கையாளர்களிடையே கல்வி உணர்வை அதிகப்படுத்தவும் இந்த முயற்சி என்று வாட்சப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவின் இரண்டு மாடல் போன்களின் விற்பனை இதுவரை 25 மில்லியனை தாண்டியுள்ளது. இந்த ஜியோ வண்டி மூலம் இந்த வருடத்திற்குள் 100 மில்லியனை தொட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஜியோ வண்டி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ், ஆங்கிலம், இந்தி போன்ற 11 மொழிகளிலும் ஜியோவில் வாட்சப்பை உபயோகப்படுத்துவதற்கான ஆன்லைன் விடீயோவையும் வெளியிடவுள்ளனர். 

ஜியோ போனில் வாட்சப்பை பயன்படுத்த சொல்லி தரும் ஜியோ வண்டி