ads

ரோஹித், கோலி 2027 உலகக் கோப்பையில் ஆடுவார்களா ?

ரோஹித், கோலி 2027 உலகக் கோப்பையில் ஆடுவார்களா ?

ரோஹித், கோலி 2027 உலகக் கோப்பையில் ஆடுவார்களா ?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அதிரடி ஆட்டம், 2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் புதிய கேள்விகளையும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

கடைசியாக நடந்த ஒரு நாள் போட்டியில் ரோஹித் சர்மா 121 ரன்கள் குவித்து தனது 33வது ஒருநாள் சதத்தைப் பதிவு செய்தார். முந்தைய இரண்டு போட்டிகளில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த விராட் கோலி, இந்தப் போட்டியில் நிதானமாக ஆடி 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.  இந்த இருவரும் இணைந்து 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து, தாங்கள் இன்னமும் உலகின் தலைசிறந்த ஜோடி என்பதை மீண்டும் நிரூபித்தனர்.

கிரிக்கெட் வல்லுநர்கள் சிலர், ஃபார்ம் எப்படி இருந்தாலும், 2027 உலகக் கோப்பையிலும் ரோஹித், கோலி இருவரும் நிச்சயம் இந்திய அணியில் இடம் பெற வேண்டும், என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இனி வரும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித், கோலியின் ஆட்டத்தை பொறுத்தே அவர்கள் 2027 உலகக் கோப்பையில் ஆடுவார்களா ? இல்லையா ? என்பது தெரியவரும்.

ரோஹித், கோலி 2027 உலகக் கோப்பையில் ஆடுவார்களா ?