ads

Cricket updates: அம்பதி ராய்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

அம்பதி ராய்டு

அம்பதி ராய்டு

அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் அம்பதி ராய்டு ஓய்வு பெறுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிசிசிஐக்கு அனுப்பிய இ-மெயிலில், அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும், அனைத்து நிலைகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன். பிசிசிஐ  மற்றும் மாநில சங்கங்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொள்ளவதாக கூறியுள்ளார். 

33 வயதான ராய்டு 55 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1694 ரன்களை குவித்து 47.05 சராசரியும் கொண்டுள்ளார். வலது கை பேட்ஸ்மேன் ஆனா ராய்டு ஆறு சர்வதேச 20-20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

உலக கோப்பை அணி தீர்த்தேடுக்கும் பொது அம்பதி ராய்டுவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டாலும் இந்தியா அணியில் இடம் பெறவில்லை. ராய்டு இல்லாதது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இன்றைய நிலையிலும் வாய்ப்புகள் காணப்பட்டாலும், உலக கோப்பை போட்டியில் தவானுக்கு பதிலாக ரிஷப் பண்டையும், விஜயசங்கருக்கு பதிலாக மயங் அகர்வாலை தேர்தெடுத்து உள்ளனர்.

உலக கோப்பை அணியில் இடப்பெறும் போகும் போட்டியாளரின் பெயர்  வெளியிட்ட அடுத்த நிமிடமே எதிர்மறையான விதத்தில் தனது ட்விட்டர் தளத்தில் பதிவினை ஒன்றை பதித்துள்ளார் ராய்டு. 

Cricket updates: அம்பதி ராய்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

உலக கோப்பை அணியில் இடம் பெறாத காரணமே ஓய்வு பெறுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

Cricket updates: அம்பதி ராய்டு அனைத்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு