ads

ஆசிய கோப்பை 2025: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாளை மோதவுள்ளது

ஆசிய கோப்பை 2025: இந்தியா மற்றும்  பாகிஸ்தான் நாளை மோதவுள்ளது

ஆசிய கோப்பை 2025: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாளை மோதவுள்ளது

ஆசிய கோப்பை 2025 திருவிழா இப்போதே உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும்  பாகிஸ்தான் அணிகள் நாளை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் நேருக்கு நேர் மோதவுள்ளன.

கடந்த செப்டம்பர் 14 அன்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை மிக எளிதாக வீழ்த்தியிருந்தது. அந்தப் தோல்விக்குப் பிறகு, பாகிஸ்தான் அணி கடும் போராட்டத்திற்குப் பிறகு சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில், நாளை நடைபெறவுள்ள போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் பழிதீர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கடந்த போட்டியில், ஆட்டம் முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கைகுலுக்காமல் சென்றது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்போது மீண்டும் இரு அணிகளும் சூப்பர் 4 சுற்றில் மோதவுள்ளதால், இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் விண்ணைத் தொட்டுள்ளது.

சூப்பர் 4 போட்டிகள் இன்னும் ஒரு வாரம் நடைபெறவுள்ளன. அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டி நடைபெறவிருக்கிறது. எந்தெந்த அணிகள் இறுதிப் போட்டிக்குச் செல்லும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிய கோப்பை 2025: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாளை மோதவுள்ளது