ads
ICC CWC 2019: இந்தியா நியூஸிலாந்து போட்டி 20 ஓவர் போட்டியாக வாய்ப்பு, மழை குறுக்கீட்டால் சிக்கல்
ராம் குமார் (Author) Published Date : Jun 13, 2019 18:23 ISTSports News
ICC CWC 2019: 3 மணிக்கு தொடங்கவிருந்த இந்தியா நியூஸிலாந்து மழையினால் தாமதமாகியுள்ளது. இன்னும் டாஸ் ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மழை பெய்து கொண்டிருப்பதால் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் உலகக்கோப்பை 2019 போட்டிகளில் நூறு சதவிகித வெற்றி அந்தஸ்துடன் உள்ள நிலையில் இந்த போட்டி ஏதேனும் ஓர் அணியை அந்த அந்தஸ்திலிருந்து இறக்கி இரண்டாம் இடத்திற்கு தள்ளும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மழை குறுக்கீடு ரசிகர்களை அதிருப்தி அடைய செய்தது.
இந்தியா கடந்த இரண்டு போட்டிகளில் பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்க மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை வென்று நல்ல நிலையில் உள்ளது. நியூஸிலாந்து அணி நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் சுமார் அணிகளான வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் மோசமான நிலையில் உள்ள இலங்கை அணிகளை வென்று முதல் இடத்தில உள்ளது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியை காண உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று குறைவாக காணப்பட்ட மழைக்கான வாய்ப்பு தற்போது அதிகரித்துள்ள நிலையில் போட்டி நடக்குமா இல்லையா என்பதே சந்தேகத்திற்க்கு உள்ளாகியுள்ளது. போட்டி 20 ஓவராக குறைக்கப்பட இந்திய நேரப்படி 8.30 மணியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது வரை மழை பெய்தால் இன்று ஒரு விறுவிறுப்பான 20 ஓவர் போட்டியை காண இயலும்.
மேலும் காருக்கு பிறகும் மழை குறுக்கிட்டால் போட்டி றது செய்பட வாய்ப்பு உள்ளது. அது போட்டியை காண வந்த ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்யும். வானிலை அறிக்கை இன்னும் மோசமான நிலையிலேயே உள்ளதால் எதையும் உறுதியாக கூற இயலாத நிலையில் போட்டி அமைப்பாளர்கள் உள்ளனர். மைதானத்தின் அடுத்தகாட்ட ஆய்வு இன்னும் சில நேரத்தில் உள்ளதால் ஏதேனும் ஒரு முடிவு தெரியவரும்.