ads
ICC CWC 2019: உலகக்கோப்பை 2019 இறுதி ஆட்டங்களில் மழை பெய்தால் என்ன நடக்கும்?
ராம் குமார் (Author) Published Date : Jun 15, 2019 15:00 ISTSports News
ICC CWC 2019: இங்கிலாந்தில் நடந்துவரும் கிரிக்கெட் உலகக்கோப்பை 2019 மழையால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. கடந்த நாட்களில் இதுவரை 4 போட்டிகள் மழை குறுக்கீட்டால் றது செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதில் சில போட்டிகள் டாஸ் போடப்படாமல் நிறுத்தப்பட்டது. உலகக்கோப்பை வரலாற்றில் 4 போட்டிகள் மோசமான வானிலையால் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை. மேலும் இது நான்கு போட்டிகளுடன் நிற்குமா என்றால் அது கேள்விக்குறியே. வரும் நாட்களின் வானிலை அறிக்கையும் மோசமாக காணப்படுவதால், இன்னும் சில போட்டிகள் சிக்கலுக்கு உள்ளாகலாம்.
வரும் ஞாயிறு என்று நடக்கும் இந்தியா பாக்கிஸ்தான் இடையேயான போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதால் இரு நாடு ரசிகர்களும் ஆவலோடு காத்திருக்கின்றனர். லீக் ஆட்டங்களில் மழை குறுக்கிடும் நேரத்தில் புள்ளிகள் பகிரப்படும் நிலையில், இதே நாக்-அவுட் சுற்றான அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் மழை குறுக்கிட்டால் என்பது விவாதிக்கப்படவேண்டிய ஒன்று.
அரையிறுதி போட்டிகளின்போது வானிலை காரணத்தினால் போட்டி தடைபட்டால் ரிசர்வ் டே அறிவிக்கபட்டு போட்டியின் தேதி மாற்றி அமைக்கப்படும். தள்ளிவைக்கப்பட்ட நாளிலும் மழை குறுக்கிட்டால் இரு அணிகளிடையே புள்ளிபட்டியலில் மேலிடத்தில் இருக்கும் அணி போட்டியின்றி இறுதி சுற்றுக்கு முன்னேறிவிடும். இவ்வாறு நடந்து இறுதிசுற்றுக்கு ஓர் அணி சென்றால் அது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்யும் என்றாலும் இதுவே விதிமுறை.
இறுதி போட்டியிலும் வானிலையா போட்டியை அச்சுறுத்தினால் அதற்கு ரிசர்வ் டே அறிவிக்கப்படும். ரிசர்வ் நாளில் இதே போல் நடைபெறும் நிலையில் போட்டி ரத்து செய்யப்பட்டு உலகக்கோப்பை ட்ராபி இரு அணிகளாலும் பகிரப்படும். அந்த சமயத்தில் வெற்றி தோல்வி இன்றி அணிகள் சுமூகமாக செல்லும் நிலை ஏற்படும். இதுவரை கிரிக்கெட் சரித்திரத்தில் இப்படி அரங்கேறியதில்லை, அனால் இங்கிலாந்து வானிலையை காணும்போது இது பெரிய ஆச்சரியமாக தெரியவில்லை.