ads
உலகக்கோப்பை 2019 : ஒரு முன்னோட்டம்
ராம் குமார் (Author) Published Date : May 29, 2019 23:14 ISTSports News
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த உலகக்கோப்பை போட்டி நாளை தொடங்கவுள்ளது. 12வது உலக கோப்பை போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ளது. ஐந்தாவது முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உலககோப்பைக்கான போட்டிகள் நடைபெறுகின்றன. முன்னதாக 1975 , 1979 , 1983 , 1999 ஆண்டுகளில் போட்டிகள் நடைபெற்றது. முதல் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மொத்தம் 10 அணிகள் உலகக்கோப்பையை வெல்வதற்கான போட்டியில் பங்கேற்கவுள்ளனர். இந்தியா, இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா, பாக்கிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து
,பங்களாதேஷ், ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா போன்ற அணிகள் பங்கேற்கின்றனர். ஐசிசி தர வரிசை பட்டியலில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகளும், தொகுத்து வழங்கும் இங்கிலாந்து அணியும், 2018 ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட அணிகளும் உலககோப்பை போட்டியில் விளையாடவுள்ளனர்.
பல்வேறு மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றின் பட்டியல்:
மைதானங்கள் போட்டிகள்
எட்க்பாஸ்டன் மைதானம் 5 (அரை இறுதி)
பிரிஸ்டல் உள்ளூர் மைதானம் 3
சோபியா கார்டன்ஸ் மைதானம்4
ரிவேர்சைடு மைதானம் 3
ஹெட்டிங்கிலே மைதானம் 4
லார்ட்ஸ் மைதானம் 5 (இறுதி போட்டி)
ஓவல் மைதானம் 5
ஓல்ட் ட்ராப்போர்ட் மைதானம் 6 (அரை இறுதி)
ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானம் 5
ரோஸ் பௌல் மைதானம் 5
டவுன்டன் மாகாணத்தில்
உள்ள மைதானம் 3
உலக கோப்பை போட்டிகள் மே 30 தொடங்கி ஜூலை 14 வரை நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணிகளும் தனக்கு எதிரான 9 அணிகளுடன் போட்டியிட வேண்டும். வெற்றி பெரும் அணிகள் மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியலிடப்படுவார்கள். முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதிக்கொண்டு அதில் வெற்றி பெறும் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறுவார்கள். அரை இறுதி போட்டிகள் ஜூலை 9,11 ஆம் தேதிகளில் நடைபெறும். இறுதி போட்டி ஜூலை 14 அன்று நடைபெறும். முதல் போட்டி இங்கிலாந்திற்கும் தென் ஆப்பிரிக்காவிற்கும் இடையே நடைபெற உள்ளது.
முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்ற அணிகள் விவரம்:
ஆண்டு வெற்றி பெற்ற அணி எதிராக போட்டியிட அணி
1975 வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியா
1979 வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து
1983 இந்தியா வெஸ்ட் இண்டீஸ்
1987 ஆஸ்திரேலியா இங்கிலாந்து
1992 பாக்கிஸ்தான் இங்கிலாந்து
1996 ஸ்ரீலங்கா ஆஸ்திரேலியா
1999 ஆஸ்திரேலியா பாக்கிஸ்தான்
2003 ஆஸ்திரேலியா இந்தியா
2007 ஆஸ்திரேலியா ஸ்ரீலங்கா
2011 இந்தியா ஸ்ரீலங்கா
2015 ஆஸ்திரேலியா நியூசிலாந்து
இந்த ஆண்டு வெற்றி பெறும் அணிக்கு அமெரிக்கா டாலர் மதிப்பில் 4 மில்லியன் பரிசு தொகையை வழங்கப்படும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்படும். தகுதி சுற்று போட்டிகள் இம்மாதம் 24 முதல் 28 வரை நடைபெற்றது.
கிரிக்கெட் வீரர்களின் திறன் நாளுக்குநாள் மெருகேறி வருகின்றன. தங்கள் திறமையை வெளிக்கொணர தகுந்த களம் அமைத்துள்ளது பொறுத்திருந்து காண்போம் வெல்லப்போகும் அணியை.