ads

CWC 2019: இந்தியா நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் மழை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்

கிரிக்கெட் உலக கோப்பை அரையிறுதி போட்டி

கிரிக்கெட் உலக கோப்பை அரையிறுதி போட்டி

இந்தியா நியூசிலாந்து இடையேயான முதல் அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் நகரில் நடந்து வருகிறது நியூசிலாந்து 46ஆவது ஒருவரை தொடங்கிய போது மழை போட்டியை குறிப்பிட்டது.

இந்தியா வலுவான நிலையில் இருந்த போது ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டதால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சற்று வேதனையில் உள்ளனர். போட்டி நிறுத்தப்பட்டபோது நியூசிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்த நிலையில் இருந்தனர்.

புவனேஸ்வர் குமார் மற்றும் குமார் ஆகியோர் பவுலிங்கை வெளிப்படுத்தி இந்தியாவை தொடக்கம் முதலே நல்ல நிலையில் நிறுத்தினர். நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லர் அரை சதத்தை கடந்து வீழ்ந்திருந்த நியூசிலாந்து பேட்டிங்கை நிலைநாட்டினர்.

மழை இன்னும் எவ்வளவு நேரம் பெய்யும் என்று கணிக்க முடியாத நிலையில் ஆட்ட நடுவர்கள் அவ்வப்போது மைதானத்தை பார்வையிட்டு வருகின்றனர். வில் மழை நின்று நியூசிலாந்து பேட்டிங் தொடரப்பட்டால் ஆட்டம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

ஒருவேளை மழை தொடர்ந்து பெய்து நியூசிலாந்து பேட்டிங் தொடர முடியாமல் போனால், டிஎம்எஸ் முறைப்படி இந்தியா எவ்வளவு ரன்களை சேஸ் செய்ய வேண்டும் என்பது கணிக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் ஆட்டம் தொடங்கப்பட்டால் 46 ஓவராக சுருக்கப்பட்டு இந்தியா 237 ரன்களை எடுக்க வேண்டியிருக்கும்.

மேலும் மழை வெகுநேரம் பெய்தால் ஊருக்கு எவ்வளவு ரன்களை இந்தியா அடிக்க வேண்டும் என்பது பின்தொடரும். 40 ஓவர்கள் 223 ரன்கள், 35 ஓவரில் 209 ரன்கள், 30 ஓவரில் 192 ரன்கள், 25 ஓவரில் 172 ரன்கள், 20 ஓவரில் 148 ரன்கள் இதற்கு மேல் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் ரத்து செய்யப்படும்.

லீக் சுற்றில் மழை குறுக்கிட்டால் போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும் நாக் அவுட் சுற்றில் அவ்வாறாக செய்ய முடியாது ஏதேனும் ஒரு அணி பைனலுக்கு செல்ல வேண்டும் என்பதால் ரிசர்வ் டே அறிவிக்கப்படும். முதல் அரையிறுதியில் ரிசர்வ் டே, புதன்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வியாழனன்று இரண்டாம் அரையிறுதி நடக்க உள்ள நிலையில் அந்தப் போட்டியின் ரிசர்வ் டே வெள்ளிக்கிழமை ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பையின் அரையிறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடக்க உள்ள நிலையில் இந்தப் போட்டி இவ்வாறாக திரும்பும் என்பது புதிராக உள்ளது.

ரிசர்வ் டே அன்றும் போட்டியை ரத்து செய்தால் புள்ளி பட்டியலில் மேலிடத்தில் இருக்கும் அணி பைனலுக்கு நேரடியாக சென்றுவிடும்.

CWC 2019: இந்தியா நியூசிலாந்து அரையிறுதி ஆட்டம் மழை என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்