ads

தமிழகத்தில் உள்ள 44 சாவடிகளில் வாக்கு சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் வாக்குகளை அல்ல: இந்தியா தேர்தல் ஆணையம்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரம்

மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் வாக்களிக்கப்பட்ட வாக்குகள் மாநிலத்தில் 44 வாக்குச் சாவடிகளில் கணக்கிடப்படக்கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கு பதிலாக, வாக்களிக்கப்பட்ட வாக்குகளை எண்ணும் போது வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை  வாக்குகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

47 வாக்கு சாவடிகளில் இருந்த அதிகாரிகள் போலி வாக்குப்பதிவு நடத்தினர். மேலும் பதிந்த வாக்குகளை அழிக்காமல் தவறி விட்டனர். 

இப்போலியன வாக்கு பதிவு தேர்தல் நடைபெறுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக நடைபெற்றது. ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற மக்களவை மற்றும் சட்ட மற்ற தொகுதிகளிலும் இச்செயல் அரங்கேறியுள்ளது. போலி வாக்கு பதிவினை மேற்கொள்ள இந்தியா தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. 

ஜாக்கிரதையாக சோதனை செய்யப்பட்டதில் தணிக்கை சோதனை இயந்திரங்களில் விழுந்த சீட்டுகள் 44 தொகுதிகளிலும் அளிக்கப்பட்டது என்று வட்டாரங்கள் தெரிவித்தது. மேலும் அச்சீட்டுகளின் எண்ணிக்கை தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் பார்வையாளர்கள் வைத்து இருந்த பதிவுடன் ஒப்பிட்டத்தில் ஒத்து போனதாகவும் கூறினார்கள். இந்த ஒப்பிடுதலை ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் ஒப்பிட்டதாக கூறப்படுகின்றது.

ஈரோடு மட்டும் தேனி மாவட்டங்களில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தின் எண்ணிக்கை  தணிக்கை சோதனை  இயந்திரத்தின் எண்ணிக்கையுடன் ஒத்துவராத காரணத்தால் மறு வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 10 சாவடிகளில் மறுதேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், 3 சாவடிகளில் மே 10 அன்று தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் உள்ள திருமங்கலத்தில் உள்ள பஞ்சாயத்து கூட்டுறவு தொடக்க பள்ளியில், தேர்தல் ஆணையம்  50 வாக்குகளுடன் ஒரு போலி வாக்குப்பதிவு நடத்தியது. அச்சாவடியில் தேர்தலைத் தொடங்குவதற்கு முன்னர் போலி வாக்குப்பதிவுகளை  அழிக்கப்படவில்லை என்று இந்தியா தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ ஆவணங்களுடன் தெரிவித்தனர். வாக்கெடுப்பு முடிவடைந்தபோது வாக்கு வேறுபாடுகள் 50 க்கு பதிலாக 41 ஆகா பதிவாகியது.மேலும் தேர்தல் ஆணையத்தால் வாக்குகளில் உள்ள முரண்பாட்டின் காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை என்பதால், மறுபடியும் தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளது.

அதேபோல் தேனி பாராளமன்ற தொகுதியில் இரண்டு வாக்குசாவடிகளான 

ஆண்டிபட்டி பாலசமுத்ரத்தில் உள்ள கம்மவார் சரஸ்வதி நடுநிலை பள்ளி மற்றும் பெரியகுளம் வடுக்கப்பட்டியில் உள்ள சங்கரநாராயண நடுநிலப்பள்ளியும் மறு வாக்கு பதிவை சந்திக்கும். வாக்கு சீட்டுகள் அழிக்கப்படாத காரணத்தினால்  பாலசமுத்ரத்தில்  மறு வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. வடுக்கப்பட்டியில்  நெறிமுறை மீறல் காரணமாக மறு வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. 

மின்னனு இயந்திரங்கள் மட்டும் தணிக்கை சோதனை இயந்திரங்களும் காரணமாக நடைமுறைகளை பின்பற்றாமல் மாற்றப்பட்டது. மேலும் மாற்றப்பட்ட இயந்திரங்களில் வாக்காளர்கள் தங்கள் வாக்குகள் பதிவு செய்தார்களா என்று தேர்தல் ஆணையத்தால் அறிந்து கொள்ள முயலவில்லை என்று அறிவித்தனர். மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளிலும் மறுவாக்கு நடத்தப்படும் என்று அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் அறிவிக்கப்பட்டது. 

தமிழகத்தில் உள்ள 44 சாவடிகளில் வாக்கு சீட்டுகள் எண்ணப்பட வேண்டும் வாக்குகளை அல்ல: இந்தியா தேர்தல் ஆணையம்