ads

திமுக தலைவரை சந்திக்க உள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

 தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

முன்மொழியப்பட்ட கூட்டாட்சிக்கு ஒரு உறுதியான வடிவத்தை வழங்குவதற்கான தனது முயற்சிகளை தீவிரப்படுத்தும் ஒரு நடவடிக்கையில் தெலுங்கானா முதலமைச்சர் மே 13 அன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலினை சந்திக்கவுள்ளார். தற்போதைய நாடாளுமன்ற தேர்தல்களை  பற்றியும் தற்போதைய அரசியல் சூழ்நிலையை பற்றியும் இரு தலைவர்களும் விவாதிக்கலாம் என்று முதலமைச்சர் அலுவல வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

இச்செய்தியின் வெளிப்பாடாக சந்திரசேகர் ராவ் கேரளா முதல்வர் பினராயி விஜயன் சந்தித்தார். தெலுங்கானா முதல்வர் தமிழ்நாடு மற்றும் கேரளா முதல்வர்களை சந்திப்பை மேற்கொள்ளவத்தை அறிந்த கர்நாடக முதல்வர் குமாரசாமி சந்திரசேகர் ராவ்விடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். கேரளா சந்திப்பில் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி  தலைவர், பா.ஜ.க. அல்லாத, காங்கிரஸ் இல்லாத மத்திய அரசாங்கம், மக்களவை தேர்தலுக்குப் பிறகு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். மேலும் அரசியல் ரீதியான முன்னேற்றங்களுக்கு இந்தியா மார்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி பின்னர் கலந்துரையாடப்படும் என்றார்.

மேலும் ராமேஸ்வரம், ஸ்ரீ ரங்கம் கோவில்களுக்கு செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஏப்ரல் 10 தொடங்கிய நிலையில் பாஜக, காங்கிரஸ் காட்சிகள் அல்லாத வேறு கட்சிகளுடன் சந்திப்பை 

மேர்கொள்கின்றார். மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் அணைத்து கட்சியினருடன் சந்திப்பை மேற்கொண்டு பாஜக, காங்கிரஸ் இல்லாத களம் அமைக்க திட்டமிட்டுள்ளார். 

திரிணாமுல் காங்கிரசு, பிஜு ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, ஜனதா தளம் மற்றும் திமுக ஆகிய கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூட்டாட்சி பற்றி முன்மொழிந்தார். யுஷ்ரா காங்கிரஸ் கட்சிக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சந்திரசேகர் ராவ் அடுத்த மத்திய அரசாங்க ஆட்சி பாஜக, காங்கிரஸ் காட்சிகள் அல்லது கூட்டாச்சிகள் அமையும் என்று உறுதியாக உள்ளார்.

திமுக தலைவரை சந்திக்க உள்ளார் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்