கடந்த சில திணங்களாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுக்கும் ஆளுநர் கிரண்பேடி அவர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள், தர்ணா போராட்டத்தினால் வலுத்துள்ளது.
இன்று ஆளுநர் கிரண்பேடி அவர்கள், தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்ட கருத்து மிக பரபரப்பாகியுள்ளது. முதலமைச்சர் அலுவலகம் முன்னால் யாராவது இவாரு போராட்டம் நடத்தினால் என்ன செய்விர்களோ அதையே இப்பொழுது தயவு செய்து செய்யுங்கள் என குறிப்பிட்டுள்ளார். மேலும் சில மணிநேரத்திற்கு முன், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை தேதியையும் நேரத்தையும் உறுதிப்படுத்துமாறும், இந்த நிகழ்வு பொதுமக்களுக்கு தெரியுமாறு நடக்க வேண்டும் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.