தேனியில் புதிய வாக்கு பெட்டிகள் வந்ததால் பரபரப்பு
தேனி மக்களவை தொகுதி நட்சத்திர வேட்பாளர்கள் கொண்ட தொகுதி. ஆளும் கட்சியான அதிமுகவின் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அவர்களின் மகன் அதிமுக சார்பிலும், டிடிவி தினகரன் அமமுக கட்சியின் சார்பில் தங்க தமிழ்ச்செல்வன் அவர்களும், காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களும் போட்டியிடுகின்றனர்.
இந்த பரபரப்பான தொகுதியில் தீடீர் என்று புதிய வாக்கு எந்திரங்கள் கொண்டு வந்தவுடன், அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை வெற்றிபெற இந்த பெட்டிகள் வந்தனவா என்று காங்கிரஸ் மற்றும் அமமுக கட்சியின் நிர்வாகிகள் விவாதம் நடத்த, அங்கு வந்த பெட்டிகள் வாக்கு பதிவாகாத பெட்டிகள் என்று சொல்லியும் எதிர்கட்சிகள் சமாதானம் ஆகவில்லை.