ads
கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுமா ?
புருசோத்தமன் (Author) Published Date : Oct 08, 2025 16:18 ISTPolitics
சமீபத்தில் கரூரில் நடந்த துயரச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் யார் என்பது இதுவரை மர்மமாகவே உள்ள நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சதி இருப்பதாகவும், எனவே வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஏற்கனவே மூன்று மனுக்கள் உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், அந்த மூன்று மனுக்களையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனைத் தொடர்ந்து, தற்போது பா.ஜ.க கட்சியை சேர்ந்த உமா ஆனந்தன் என்பவர், தனது வழக்கறிஞர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி மேல்முறையீடு செய்துள்ளார். தலைமை நீதிபதி இந்த வழக்கை வரும் வெள்ளிக்கிழமை அன்று விசாரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை மூலம் உண்மை வெளிவந்து, துயரச் சம்பவத்துக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஒருவேளை இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டால், இதில் மறைந்திருக்கும் உண்மைகள் வெளிவரும் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.