ads

சுப்பிரமணிய சுவாமியிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ள விரும்பும் காயத்ரி ரகுராம்

காயத்ரி ரகுராம், சுப்பிரமணிய சுவாமி

காயத்ரி ரகுராம், சுப்பிரமணிய சுவாமி

தமிழ் சினிமாவில் மறைந்த பழம்பெரும் டான்ஸ் மாஸ்டரான திரு.ரகுராம் அவர்களின் இரண்டாவது மகள் “காயத்ரி ரகுராம்”. தமிழ் சினிமாவில் “சார்லி சாப்ளின்” படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார், பிறகு பிரபல டாஸ் மாஸ்டராக உருவெடுத்தார், பிறகு பா.ஜ.கவில் சேர்ந்து பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். இவர் பிரச்சனையை போர்வையாக போர்த்திக்கொண்டு உறங்கும் பழக்கம் உள்ளவர் போலத் தெரிகிறது. ஏனெனில் இவர் பிரபலமான நாளில் இருந்து ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். சொந்த வாழ்க்கையிலும் சரி, பொது வாழ்க்கையிலும் சரி இவர் எதிர்கொள்ளாத வம்பு தும்புகளே இல்லை எனலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டார் காயத்ரி ரகுராம். அந்த நிகழ்ச்சியில் இவருக்கு எப்பேர்பட்ட பெயர் கிடைத்தது என்று அனைவருக்கும் தெரியும். போதாத குறைக்கு டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் இவரை கிண்டல் செய்து உசுப்பிவிடுவதற்கென்றே ஒரு கும்பல் டுவிட்டரில் புதிதாக இணைந்து செயல்பட்டு வருகிறதோ என்னவோ. சமீபத்தில் இவர் பாஜகவில் இருந்து விலகுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதாகவும், அரசியல் வாழ்கையை கண்டு காயத்ரி பயந்து விட்டதாகவும் பிரபல அரசியல் பிரமுகர் “தமிழிசை” கூறி இருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகை காயத்ரி ரகுராம், “நான் அரசியலில் இருந்தோ பாஜகவில் இருந்தோ விலக்கிக்கொள்ளவில்லை. எனக்கு கொஞ்சம் இடைவெளை தேவைப்பட்டது, அது எனது விருப்பம்” என்றும், “ஒரு பிரேக் எடுத்துக்கொள்வதற்கும் முற்றிலுமாக விலகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது” என்றும் கூறியிருந்தார் காயத்ரி. மேலும் “என்னை பற்றி பொய் அவதூறுகளை பரப்ப வேண்டாம்” என்றும் அரசியல் பிரமுகர் தமிழிசையை கேட்டுகொண்டார்.

இந்த பிரச்சனை டுவிட்டர் மற்றும் இதர சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ள வைக்கும் வகையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “முதலில் முக்கியமான ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். பாஜகவில் இருந்து நான் விலகவில்லை, இந்திய மற்றும் தமிழக அரசியல் பற்றிய நுணுக்கமான விஷயங்களை ஆழமாக கற்றுக்கொள்ள ஒரு பிரெக்கை எடுத்துகொள்ள விரும்பினேன். சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலர் பலவிதமாக எடுத்துக் கொண்டு அவதூறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அரசியல் பிரமுகர் சுப்பிரமணிய சுவாமி அவர்களை நான் மதிக்கிறேன், அவரை பின்தொடரவும் அவரிடம் இருந்து அரசியலை கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். 

சுப்பிரமணிய சுவாமியிடமிருந்து அரசியல் கற்றுக்கொள்ள விரும்பும் காயத்ரி ரகுராம்