ads

டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: பின்னணியில் பாஜக உள்ளதாக குற்றச்சாட்டு

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை  புதுடெல்லியில் உள்ள மோட்டி நகர் சாலையில் நடந்த நிகழ்ச்சியின் போது தாக்கப்பட்டார்.  பா.ஜ.க. கோழைத்தனமான செயலுக்கு பின்னணியில் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மீ கட்சியினர் ஒரு வலுவான குற்றச்சாட்டை பதிவுசெய்கின்றனர். மேலும் தாக்கப்பட்ட நபரை கைது செய்து சிறைகாவலில் இருப்பதாக காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறினர்.

கெஜ்ரிவால் திறந்த ஜீப்பில் சாலை நிகழ்ச்சிகளை மேற்கொண்டார். அப்பொழுது சிகப்பு சட்டை அணிந்த நபர் ஒருவர் வாகனத்தின் மேல் ஏறி முதல்வரை தாக்கினர். சுற்றியிருப்பவர்கள் தடுப்பதற்கும் தாக்குதலை அரங்கேற்றி உள்ளார். டி.சி.பி மோனிகா பரத்வாஜ் கைது செய்யப்பட்ட நபரை பற்றி விவரித்துள்ளார். கைது செய்தவரின் பெயர் சுரேஷ் என்றும் 33 வயதானவர், கைலாஷ் பார்க் பகுதியிலுள்ள உதிரி பாகங்கள் ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார். 

கெஜ்ரிவால் கொலை செய்யப்பட வேண்டும் என்று மோடி மற்றும் அமித் ஷா விரும்புகிறீர்களா?" என சிசோடிய ட்வீட் செய்து பிரதமரையும், பிஜேபியின் தலைவரையும் தாக்கினர். மேலும் துணை முதல்வர் மனிஷ் சிசோதியா இச்செயலுக்கு பின்னர் பிஜேபியின் எண்ணம் உள்ளது என குற்றம்சாட்டினார். பிஜேபியால் கெஜ்ரிவாலின் மனஉறுதியை உடைக்கமுடியாமல் மேலும்  ஐந்து ஆண்டுகளில் தேர்தலில் அவரை தோற்கடிக்க முடியவில்லை. இவ்வாறான செயல்கள் மூலம் அவரை நீக்கிவிட எண்ணுகின்றார்கள். நீங்கள் கோழைகள்! இந்த கெஜ்ரிவால் தான் உங்கள் முடிவு என்று துணை முதல்வர் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர்.ஆம் ஆத்மீ கட்சியின் செய்தி தொடர்பாளர் இச்செயலினால் எங்கள் கட்சியின் கொள்கைகளை அழிக்க முடியாது என தெரிவித்தார். 

இந்த சம்பவத்தை டெல்லியின் பா.ஜ.க தலைவர் மனோஜ் திவாரி கண்டனம் செய்தார். நாங்கள் வன்முறைக்கு ஆதரவளிப்பதில்லை, இத்தகைய நடவடிக்கைகளை நாங்கள்  கண்டனம் செய்கிறோம், ஆனால் ஏன் இத்தகைய சம்பவங்கள் தேர்தல் நேரத்தில் மட்டுமே கெஜ்ரிவால் உடன் நடப்பதை நான் சந்தேகிக்கிறேன். இந்த சம்பவம் கெஜ்ரிவால் தானாகவே எழுதப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறேன் என திவாரி குற்றம் சாட்டினார்.

டெல்லி முதல்வர் மீது தாக்குதல்: பின்னணியில் பாஜக உள்ளதாக குற்றச்சாட்டு