ads

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் நேரம், பாதை மற்றும் டிக்கெட்டுகள்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் நேரம், பாதை மற்றும் டிக்கெட்டுகள்

நாட்டின் பல்வேறு நகரங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ஆகும். இதுவரை 10 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு சென்னை - மைசூர் இடையே ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்கான இரண்டாவது ரயில் சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னை - கோவை இடையே அறிமுகம் செய்யப்படுகிறது. ஏப்ரல் 8ம் தேதி ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார். இந்த ரயில் சேவைக்கான கால அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.

சென்னையிலிருந்து கோவை வந்தே பாரத் சேவை:

சென்னை மற்றும் கோவை இடையே திருப்பூர், ஈரோடு மற்றும் சேலம் என மூன்று நிறுத்தங்கள் மட்டுமே உள்ளன. இந்த ரயில் மொத்தம் 495.28 கிமீ தூரத்தை 6 மணி 10 நிமிடங்களில் கடக்கும். அதிகபட்ச வேகம் மணிக்கு 80.31 கிலோமீட்டர். இந்த ரயில் புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும். தினமும் காலை 6 மணிக்கு கோவைக்கு புறப்படும்.

கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்:

கோவையில் இருந்து காலை 6 மணிக்கு கிளம்பி, வந்தே பாரத் 6.30am மணிக்கு திருப்பூர் வந்து 6.40 மணிக்கு புறப்படும். பின்னர் 7.17am ஈரோடு வந்து 7.20am புறப்படும். 8.08am சேலம் வந்து 8.10am புறப்படும். இறுதியாக, மதியம் 12.10பின் மணிக்கு சென்னை சென்றடையும். 

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்:

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையில் இருந்து மதியம் 2.20 மணிக்கு எதிர் திசையில் புறப்படுகிறது. சேலத்துக்கு 6.03pm   வந்து 6.05pm புறப்படும். வந்தே பாரத் 7.02pm ஈரோடு வந்து 7.05pm புறப்படும். 7.43pm திருப்பூர் வந்து 7.45pm புறப்படும். இறுதியாக, இரவு 8.30pm மணிக்கு கோவை சென்றடையும். இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், மேற்கண்டவாறு தோராயமான கால அட்டவணை உள்ளது. எனவே ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும்போது சிறிய மாற்றங்கள் இருக்கலாம்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சென்னையிலிருந்து கோயம்புத்தூர் செல்லும் நேரம், பாதை மற்றும் டிக்கெட்டுகள்