ads

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா: 23 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று பிப்ரவரி 5 ஆம் தேதி 2020, பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் தஞ்சாவூருக்கு வந்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் படி தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் நடத்தப்படுகிறது. இன்று உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

250 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மாநிலம் முழுவதிலும் இருந்தும் மற்றும் பிற மாநிலங்களிலிருந்தும் தஞ்சாவூர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் முழுதும் பண்டிகை முன்னிட்டு மக்கள் சந்தோசமாக, 1000 ஆண்டுகள் பழமையான கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு மகிழ இருக்கிறார்கள்.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் யாக பூஜை, ஹோமம் மற்றும் பிற சடங்குகள் ஏற்கனவே காலை 7:30 மணிக்கு தொடங்கப்பட்டுள்ளன. கோயிலில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கான சிறப்பு பூஜை  இப்போது காலை 10 மணி முதல் நடந்து வருகிறது. மாலை 6 மணிக்கு பெருவுடையாருக்கு அபிஷேகம் இருக்கும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது

பக்தர்களுக்கு பாதுகாப்பாகவும், எந்த ஒரு அசம்பாவிதங்கள் நடக்காமல் இருப்பதற்கு 5000 க்கும் மேற்பட்ட காவலர்கள் பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள பக்தர்களின் கூட்டம் அதிகமாக வரும் நிலையில், கோயிலின் காம்பவுண்ட் சுவருக்குள் முன் அனுமதி பெற்ற 20,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், விஐபிகளுக்கும் பொதுமக்களுக்கும் தனித்தனி வரிசைகள் அமைத்து எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவக் குழு, தீயணைப்பு சேவைப் பணியாளர்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் ஏற்கனவே கோயிலிலும் அதைச் சுற்றியும் உள்ள இடங்களில் தயார் நிலையில் உள்ளது.

மன்னன் ராஜ ராஜ சோழன், 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சாவூர் கோயில் உலக புகழ்பெற்ற கட்டிடக்கலை சிற்பமாகும். ஆயிரம் வருடங்களுக்கு முன் அதிநவீன தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள தஞ்சை பெரிய கோயில் இன்றளவும் உலக மக்கள் மத்தியில் பெரிய ஆச்சரியத்தை அளிக்கிறது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது

இன்று உள்ள எந்த ஒரு அதிநவீன தொழில்நுட்பம் அந்த காலகட்டத்தில் இருந்திருக்க வாய்பு குறைவு, பின் எவ்வாறு இது சாத்தியம் என்று கேள்வி கேட்கும் மக்களுக்கு மன்னன் ராஜ ராஜ சோழன் உணர்த்துவது, அதிநவீன தொழில்நுட்பம் என்று நாம்  நினைக்கும் இன்றைய தொழில்நுட்பத்தை விட, அந்த காலகட்டத்தில் இருந்தது அதிநவீனமான தொழில்நுட்பமும், திறமைமிக்க புத்திசாலிகளின் செயல்திறனால் மட்டுமே சாத்தியமானது.

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக தொடங்கியது