நடிகர் விஜய் நெல்லை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

நடிகர் விஜய்

தமிழகத்தில் இந்த மாதம் வரலாறு காணாத மழை பெய்துள்ளது. முதலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், அதைத்தொடர்ந்து தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியிலும் கனமழை பெய்தது. இந்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உடமைகளையும், உயிர்களையும் இழந்தனர்.

வீடுகள், சாலைகள் மற்றும் பல்வேறு கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. வெள்ளத்தில் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் இறந்தன. இதையடுத்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணத் தொகையை வழங்கி வருகிறது.

இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இதற்காக நடிகர் விஜய் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தார். அப்போது, கே.டி.சி.நகரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உதவி செய்தார். அவரை காண மைதானத்தில் ரசிகர்கள் குவிந்துள்ளதால், அவருக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Share on:

Latest Post