ads

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புதிய சேவை: டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சர்வதேச விமான சேவை

ஸ்பைஸ் ஜெட்

ஸ்பைஸ் ஜெட்

குறைந்த விலையில் புதிய 8 சர்வதேச விமான சேவைகளை தொடங்கி உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் இன்று அறிவித்துள்ளது. அடுத்த மாதம் டெல்லி மற்றும் மும்பையில் இருந்து தொடங்கி ரியாத், டாக்கா, ஜெட்டா போன்ற வெளிநாட்டு நகரங்களை இணைத்து சேவையை  வழங்குகிறது. 

மும்பை-ரியாத்-மும்பை, மும்பை-டாக்கா-மும்பை, டெல்லி-டாக்கா-டெல்லி, டெல்லி-ஜெட்டா-டெல்லி என்று தினசரி இடைவிடாத விமான வழிகளை வகுத்துள்ளது ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 168 இருக்கைகள் கொண்ட போயிங் 737-800 விமான ரகம் மேற்கூறிய அனைத்து வழிகளிலும் நிலைநிறுத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

மும்பை-ரியாத், டாக்கா-டெல்லி மற்றும் ஜெட்டாவுடன் இணைக்கும் வசதியை அதுவும் குறைந்த கட்டணத்தில் முதல் முறையாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வழங்கி உள்ளது என தெரிவித்துள்ளனர். சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத், ஸ்பைஸ்ஜெட்டின் 10 வது சர்வதேச இலக்கு இடமாகவும் மேலும் மத்திய கிழக்கில் நான்காவது நிலையத்தை அமைத்துள்ளதாகவும் நிறுவனம் அறிவித்துள்ளது. 

சவூதி அரேபியாவின் தலைநகரம் மற்றும் மிகப்பெரிய நகரமான ரியாத் நாட்டின் முக்கிய வணிக மையமாகவும், நிதி மையமாகவும் உள்ளன. மும்பை-டாக்கா-மும்பை  மற்றும் மும்பை-ரியாத்-மும்பை சேவைகள் முறையே ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 15 முதல் தொடங்கப்படும் என்றும் டெல்லி-டாக்கா-டெல்லி மற்றும் டெல்லி-ஜெட்டா-டெல்லியின் தினசரி விமானங்கள் ஜூலை 31 முதல் தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட்டின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜய் சிங் கூறுகையில், சவுதி அரேபியாவிற்கு இயங்கும் ஒரே இந்திய பட்ஜெட் விமான நிறுவனம் ஸ்பைஸ்ஜெட் ஆகும். ரியாத் மற்றும் ஜெட்டாவுக்கான  புதிய விமான சேவையால் இந்தியாவில் இருந்து பயணிக்கும் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்களுக்கு பெரிதும் பயனளிக்கும் என்றும் தெரிவித்தார்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் புதிய சேவை: டெல்லி மற்றும் மும்பையில் இருந்து சர்வதேச விமான சேவை