ads

விடைத்தாள் நகல் பக்கத்திற்கு ரூபாய் 2 மட்டுமே பெறவேண்டும்: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுக்கு உத்தரவு

விடைத்தாள் நகல்

விடைத்தாள் நகல்

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு உயர் கல்வி நிறுவனங்களை மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். பதில் தாள்களின் நகல்களுக்கு பக்கம் ஒன்றுக்கு ரூபாய் 2 ஆக நிர்னையித்துள்ளது. மாணவர்கள் ரூ. 60 முதல் 80 வரை மட்டுமே ஒரு பாட விடைத்தாளுக்கு செலுத்துவார்கள். ஆனால் பல்கலைக்கழகம்  ரூபாய் 300  முதல் 1000 வரை வசூலிக்கின்றனர். 

அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகம் ரூ. 300 கட்டணம் வசூலிக்கும்போது, ​​தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் 1,000 ரூபாய் நகலுக்கு பெறுகின்றது. பிரிவு அ மற்றும் ஆ அல்லது தாள் I மற்றும் II ஆகியவற்றைக் கொண்டிருக்கும்பட்சத்தில், கட்டணம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக செலுத்தப்பட வேண்டும்.  

மத்திய தகவல் ஆணையம் குறிப்பிட்டப்படி நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களுக்கும், தேர்வு மையங்களுக்கும் நகலுக்கு ரூபாய் 2 என்ற கட்டணத்தை பொருத்த வேண்டும் என்று ஆணையம் அறிவித்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்த உத்தரவை முறையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இம்முறையை கட்டாயமாக்கும் படி பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிற்கும், தேர்தல் மையங்களுக்கும் செயல்படுத்த வலியுறுத்துகின்றது. பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் சி. பிச்சாண்டி கூறுகையில், மாணவர்கள் பெருமளவில் நகல்களுக்காக  செலுத்த வேண்டியது இல்லை என்றார்.

பல மாணவர்கள் நகல்களை பெறுவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய காரணத்தினாலே அவர்களுக்கு முறையாக வரவேண்டிய மதிப்பெண்களை பெறாமல் விடுகின்றனர். இச்சலுகை ஆனது பல தரப்பட்ட மாணவர்களுக்கு தளர்த்து காணப்படும். மாணவர்களின் நலன் கருதி இவ்வாறான முறைகள் வரவேற்கும் படி உள்ளன. 

விடைத்தாள் நகல் பக்கத்திற்கு ரூபாய் 2 மட்டுமே பெறவேண்டும்: பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுக்கு உத்தரவு