ads

இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத உதவிய செய்தியாளர்கள் மற்றும் காவலர்கள்

நீட் தேர்வு எழுத உதவிய செய்தியாளர்கள் மற்றும் காவலர்கள்

நீட் தேர்வு எழுத உதவிய செய்தியாளர்கள் மற்றும் காவலர்கள்

வழக்கம் போல் நீட் தேர்வு எழுதும் போது மாணவர்கள் பதட்டத்தில் அவர்களுது ஆதார் பிரதிகள் அல்லது ஏதாவது ஆவணங்கள் தொலைந்தோ மறந்தோ போவது வழக்கம். இந்த நிகழ்வு இன்று நீட் தேர்வு எழுத வந்த இரண்டு மாணவர்களுக்கு கோவையில் நடந்தது.

சத்தியமங்கலத்தில் இருந்து கோவை தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத வந்த பிரியா என்ற மாணவி, வரும் அவசரத்தில் ஆதார் பரிதியை எடுத்துவர மறந்து விட்டார், மற்ற அணைத்து ஆவணங்களையும் சரியாக வைத்துத்திருந்தாலும் அவரால் உள்ள செல்ல முடியவில்லை. 

அங்கு இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் மாணவிக்கு முடிந்த வரை உதவி செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆதார் கார்ட் பிரிண்ட் அவுட் எடுக்க முற்பட்ட போது, OTP sms சத்தியமங்கலத்தில் உள்ள மாணவியின் தந்தைக்கு சென்றது. அவரை தொடர்பு கொண்ட போது, அவரால் குறுஞ் செய்தியை சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை. இருபது நிமிட போராட்டத்திற்கு பின் செய்தியாளர்களின் அறிவுரைப்படி அருகில் இருக்கும் மற்றவரிடம் காண்பித்து குறுஞ் செய்தியை பெற்றனர். நமது நிருபரின் அலுவலகம் நடக்கும் தூரத்தில் இருந்ததால் எளிதில் பிரிண்ட் அவுட் எடுத்து காவல் அதிகாரிகளிடம் கொடுக்கபட்டது., பின்னர் மாணவி எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் தேர்வு எழுத சென்றார்.

இது நடந்து கொண்டிருக்கையில் ஒரு மாணவர், தனது நீட் அட்மிட் கார்டை தவறவிட்டிருக்கிறார். அங்கு இருந்த காவல் அதிகாரிகள், வாட்ஸாப்ப் மூலம் மாணவரின் பெற்றோரிடம் அட்மிட் கார்டின் தகவுள்களை பெற்று, இரண்டு மணிக்கு உள்ளே செல்ல வேண்டிய மாணவர் 2.15pm மணிக்கு சென்றார். நமது நிருபரின் வீடு அருகாமையில் இருந்ததால் மாணவர்களுக்கு உதவ முடிந்தது. 

இந்த உதவி யார் வேண்டுமானாலும் செய்ய கூடியது, பெரும்பாலும் வேறு மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வை எழுத வரும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அருகில் பிரிண்ட் அவுட் எடுக்கும் வசதிகள் எங்கு இருக்கும் என்பது தெரியாது, மற்றும் இன்று ஞாயிறு என்பதால் கடைகளும் மூடியிருக்கும். இவ்வாறு இருக்கும் சூழ்நிலையில், நீட் தேர்வை வைத்து அரசியில் செய்யும் அரசியில் கட்சிகள், ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு நடக்கும் பள்ளிகளில் இலவசமாக பிரிதிகள் மற்றும் பிரிண்ட் அவுட் எடுக்கும் வசதிகள் வழங்க வேண்டும்.

செய்தி சேகரிப்பது மட்டும்மில்லாமல் மாணவர்களுக்கு உதவிய மற்ற அணைத்து செய்தியாளர்களுக்கும், துரிதமாக மாணவர்களுக்கு உதவிய காவல் அதிகாரிகளுக்கும் நன்றி. 

இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத உதவிய செய்தியாளர்கள் மற்றும் காவலர்கள்

இரண்டு மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத உதவிய செய்தியாளர்கள் மற்றும் காவலர்கள்