தமிழகத்தில் முதல் சிறப்பு ரயில் காட்பாடியிலிருந்து ஜார்க்கண்ட் ஹதியாவுக்கு புறப்பட்டது

வட மாநில தொழிலாளி. Migrant Workers from Tamil Nadu.



தமிழகத்தில் முதல் சிறப்பு ரயில் காட்பாடியிலிருந்து ஜார்க்கண்ட் ஹதியாவுக்கு புறப்பட்டது. வட  மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர், தமிழகத்தில் உள்ள கட்டுமானம், பெட்ரோல் பங்க், ஜவுளி உற்பத்தி மற்றும் பல்வேறு நிறுவனங்களில் வேலை செய்துகொண்டு இருக்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு இவர்களை மன ரீதியாக பெரிதும் பாதித்துள்ளது என கூறுகின்றனர். வேலை இருந்தால் எங்களுக்கு ஏதும் தெரியாது, வேலை இல்லாமலே இருப்பதும், வெளியே செல்லாமல் இருப்பது மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, இதனால் நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதாக கூறினார் வட மாநில தொழிலாளி.

இவர் மேலும் கூறுகையில், சிலர் குடும்பங்களை விட்டு இங்கு வேலை பார்த்துவருகின்றனர். இந்த  சூழ்நிலையில் வேலை இல்லாத காரணத்தினால் தங்களது குடும்பங்களுக்கு பணம் அனுப்பமுடியவில்லை மேலும் குடும்பத்தினர் கஷ்டப்படுவதினாலும், இங்கு மேலும் மேலும் ஊரடங்கு நீட்டித்துக்கொண்டே செல்வதால், என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பல நாட்களாக அரசிடம் இது குறித்து மனு அளித்துவந்த நிலையில், இன்று எங்களது மாநிலத்திற்கு சென்று குடும்பங்களை பார்ப்பதில் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார். இவரை போல் தமிழகத்தில், மற்ற மாவட்டத்தில் இருந்து இவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Post