ads
ஜியோ யூசர்ஸ்க்கு 35,000 மதிப்புள்ள ஜெமினி AI ப்ரோ ஃபிரீ
ராசு (Author) Published Date : Nov 11, 2025 11:39 ISTஇந்தியா
டெலிகாம் இண்டஸ்ட்ரில ஒரு பெரிய சர்ப்ரைஸ் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio)-வும், கூகுள் (Google)-ம் சேர்ந்து ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர் . இதனால, சுமார் ரூ.35,000 க்கு மேல வர்த் உள்ள கூகுளோட பிரீமியம் Gemini AI 2.5 Pro வெர்ஷன் சப்ஸ்கிரிப்ஷனை ஜியோ கஸ்டமர்ஸ் 18 மாசத்துக்கு ஃப்ரீயா வாங்கிக்கலாம்.
சலுகையின் முக்கிய அம்சங்கள்
ஜெமினி 2.5 ப்ரோ (Gemini 2.5 Pro): கூகுளின் மிகச் சிறந்த மற்றும் மேம்பட்ட AI மாடலுக்கான பிரத்யேக அணுகல்.
AI இமேஜ் ஜெனரேஷன்: AI உதவியுடன் துல்லியமான படங்களை உருவாக்க முடியும்.
வீடியோ உருவாக்கம்: Veo 3.1 போன்ற அதிநவீன AI மாடல்கள் மூலம் டெக்ஸ்ட்டை உள்ளிட்டு சினிமா தரத்திலான வீடியோக்களை உருவாக்க முடியும்.
2TB கிளவுட் ஸ்டோரேஜ்: கூகுள் ஒன் (Google One) மூலம் கூகுள் டிரைவ், ஜிமெயில் மற்றும் போட்டோஸிற்காக 2 டெராபைட் (2 TB) அளவுக்கு கூடுதல் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
கூகுள் வொர்க்ஸ்பேஸ் AI: ஜிமெயில், டாக்ஸ் போன்ற கூகுள் வொர்க்ஸ்பேஸ் சேவைகளிலும் மேம்பட்ட AI அம்சங்களைப் பயன்படுத்தலாம்.
ஆரம்பத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட இந்தச் சலுகை, தற்போது அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியோவின் அன்லிமிடெட் 5G பிளான்கள் (ரூ. 349 மற்றும் அதற்கு மேல் உள்ள பிளான்கள்) வைத்திருக்கும் அனைவரும் இந்தச் சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர்.
சலுகையைப் பெறுவது எப்படி?
1) உங்கள் மொபைலில் MyJio செயலியைத் திறக்கவும்.
2) செயலியின் முகப்புப் பக்கத்தில் தெரியும் Google Gemini அல்லது Early Access பேனரை கிளிக் செய்யவும்.
3) Claim Now ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஜிமெயில் ஐடி (Gmail ID) மூலம் லாகின் செய்து சலுகையை உறுதிப்படுத்தவும்.
4) சலுகை வெற்றிகரமாக ஆக்டிவேட் ஆன பிறகு, உங்களுக்குக் கூகுள் ஒன் (Google One) மற்றும் ஜியோவில் இருந்து உறுதிப்படுத்தும் தகவல் (Confirmation) வரும்.
இந்தியாவில் AI தொழில்நுட்பத்தை அனைவருக்கும் கொண்டு செல்லும் நோக்கத்துடன், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்களின் கூட்டு முயற்சியின் ஒரு பகுதியாக இந்தச் சலுகை வழங்கப்படுகிறது.