பாலிவுட் நடிகர் இர்பான் கான் பெருங்குடல் புற்று நோயால் இன்று உயிரிழந்தார்

பாலிவுட் நடிகர் இர்பான் கான்



ஜுராசிக் உலகம் மற்றும் பல ஹிந்தி வெற்றி படங்களில் நடித்த பாலிவுட் நடிகர் இர்பான் கான், இவர் பெருங்குடல் புற்று நோயால் பாதிக்கப்பட்டுஇருந்தார். சில மாதங்களுக்கு முன்னரே, லண்டனில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தவர் உடல்நிலை மோசமான சூழலில் இருந்தபோது, மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று இர்பான் கான் உயிரிழந்தார், இவருக்கு வயது 53 ஆகிறது.

 நடிகர் இர்பான் கான் மனைவி சுதாபா சிக்தர், மற்றும் மகன்கள் பாபில் மற்றும் அயன் உள்ளனர்.

Share on:

Latest Post