நாளை தான் ஊரடங்கு உத்தரவு ஆனால் இன்றே கோயம்பேடு பஸ் நிலையத்தில் சொந்த ஊருக்கு செல்ல கூட்டம் கூட்டமாக குவிந்த மக்கள். தமிழக அரசாங்கம் இன்று மாநில 144 தடை உத்தரவு அறிவித்தபின், வழக்கம் போல் மக்கள் பந்திக்கு முந்துவதை போல், பஸ்ஸிற்கு முந்தி தாங்களாகவே கொரோனா வைரஸை இலவசமாக பெற இருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது மற்ற ஊரில் இருக்கும் மக்களின் மனநிலை வெகுவாக பாதிப்படைகிறது.

twitter1242091921117306882

மக்கள் கூட்டமாக எங்கும் கூடுவது பாதுகாப்பு இல்லை, அனைவரும் கொரோனா வைரஸ் பரவும் வேகத்தை அறிந்து கவனமாக இருக்க வேண்டியது தனி மனிதர்களின் கடமை. 144 தடைக்கு இன்னும் நாற்பத்தி எட்டு மணிநேரம் இருக்கும் நிலையில், மக்கள் முடிந்த வரை, கவனமாக செயல் படவேண்டியது அவசியம்.