ads

தண்ணீர் நெருக்கடியால் காய்கறிகளின் விலை உயர்வு: சென்னை கோயம்பேடு சந்தை

சென்னை கோயம்பேடு சந்தை

சென்னை கோயம்பேடு சந்தை

தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை மாநகராட்சியில் காய்கறிகளின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. கோயம்பேடு சந்தையில் ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 15 இருந்து 20 வரை விற்கப்பட்ட பீன்ஸ் இன்று சந்தையில் ரூபாய் 130 திற்கு விற்கப்படுகிறது. வெங்காயம், முருகங்கை காய், உருளைக்கிழங்கு போன்ற காய்களை தவிர அனைத்து காய்கறிகளின் விலை கடந்த இரண்டு மாதத்தை விட 10 மடங்கு ஏறியுள்ளது. 

முகூர்த்தம்  நிறைந்த மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூன் வரை) காய்கறிகளின் விலை பொதுவாக ஏற்ற இறக்கமாக காணப்படும், எனினும்  இந்த இரண்டு மாதங்களில் காய்கறிகளின் விலை வீழ்ச்சியடையாதது இதுவே முதல் முறை என்று கோயம்பேடு சந்தை விற்பனையாளர்கள் தெரிவித்தனர். இந்த கோடையில் சந்தைக்கு வரும் லாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்ததையும் தெரிவித்தனர். 

தண்ணீர் நெருக்கடியால் காய்கறிகளின் விலை உயர்வு: சென்னை கோயம்பேடு சந்தை

முன்னர் கோடை காலத்தில் ஒவ்வொரு நாளும் 400 காய்கறிகள் கொண்ட  லாரிகள் சந்தையை அடையும். ஆனால் இப்போது 200-250 மட்டுமே வருகிறது. எந்தவொரு காய்கறிகளிலும் ஒரு கிலோவுக்கு மேல் வாடிக்கையாளர்கள் வாங்குவதில்லை. இதன் காரணமாக, விற்பனையாளர்கள் அடிப்படை விலையில் இருந்து  ரூ .5 முதல் ரூ .10 வரை குறைத்து காய்கறிகளை விற்பனை செய்கின்றனர், முன்பு போல் விற்பனையாளர்கள் அதிக லாபம் ஈட்டுவது இல்லை என்று கோயம்பேடு காய்கறி விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அப்துல் காதர் கூறினார்.

முன்பு விற்பனையாளர்கள் 10 ரூபாய்க்கு மூன்று கொத்துமல்லி கட்டு விற்கப்பட்டு வந்தன.ஆனால் இன்று காய்ந்த ஒரு கட்டு 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் விலையின் உயர்வு காரணமாக காய்கறிகளின் கொள்முதலையும் குறைத்து விட்டனர். மேலும் சந்தைக்கு வரும் காய்கறிகள் வறண்டு காணப்படுவதால் சமையலில் சுவை இல்லாமல் இருக்கின்றது என வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். 

   காய்கறிகள்    

 ஏப்ரல் மாத

மொத்த விலை

ஜூன்   மாத விலை

தக்காளி

ரூபாய் 25

(3 கிலோ )

ரூபாய் 40

(1கிலோ ) 

பச்சை மிளகாய் ரூபாய் 20ரூபாய் 80
பாவற்காய் ரூபாய் 30ரூபாய் 70
பீன்ஸ்ரூபாய் 20ரூபாய் 130
அவரைக்காய் ரூபாய் 20

ரூபாய் 80 - 100

மூலம்: கோயம்பேடு காய்கறி விற்பனையாளர்கள் சங்கம்

தண்ணீர் நெருக்கடியால் காய்கறிகளின் விலை உயர்வு: சென்னை கோயம்பேடு சந்தை