ads

சென்னை, கோவை, மதுரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு

கோவையில் அமைச்சர் வேலுமணி அவர்கள் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறார்.

கோவையில் அமைச்சர் வேலுமணி அவர்கள் நிவாரணப் பொருட்களை மக்களுக்கு வழங்குகிறார்.

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலின் தற்போதைய நிலை குறித்து இன்று (24.04.2020) முதல் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். கிராமப்புறத்தில் இந்த நோய் கட்டுப்பாட்டில் இருந்தாலும் நகரங்களில் இன்னும் சிறிது கட்டுப்பாடு தேவைப்படுகிறது.

இதனால் கொரோனா நோய் அதிகம் உள்ள மூன்று முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு நான்கு நாட்களுக்கு அமல்படுத்த உள்ளதாக அறிவித்திருந்தார், அந்த மூன்று நகரங்கள் சென்னை, கோவை மற்றும் மதுரை. இந்த நகரங்களில் மட்டும் ஏப்ரல் 26 காலை 6 மணி முதல், ஏப்ரல் 29ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இவை மூன்று நகரங்களுக்கு பின் இருக்கும் இரண்டு நகரங்கள் சேலம் மற்றும் திருப்பூர், இங்கு மூன்று நாட்கள் முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.  ஏப்ரல் 26 காலை 6 மணி முதல், ஏப்ரல் 28ஆம் தேதி இரவு 9 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்த குறிப்பிட்ட முழு ஊரடங்கில் கீழ்க்கண்ட அத்தியாவசிய பணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

  • மருத்துவம் சார்ந்த துறைகள் வழக்கம் போல் இயங்க அனுமதி .
  • அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் தலைமை செயலகம், சுகாதார துறை, காவல்துறை, மின்சாரம், ஆவின், போன்ற அரசு சார்ந்த பணிகள் நடக்கும்.
  • மத்திய அரசு அலுவலகங்களும், வங்கிகள் தேவைப்படும் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
  • அம்மா உணவகங்கள், எ டி ம்  இயந்திரங்கள் வழக்கம் போல் செயல்படும்.
  • தொலைபேசி மூலம் உணவு ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் பணிகளுக்கு அனுமதி.
  • முதியோர், மாற்றுத்திறனாளி, ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் ஆகியோர்க்கு உதவி செய்பவர்களுக்கு அனுமதி.

சென்னை, கோவை, மதுரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு