ads

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கேரளா குடிமக்கள் பாராட்டிற்குரியவர்கள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கேரளா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கேரளா

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பல்வேறு கோணங்களில் எடுத்து வருகிறது மத்திய மாநில அரசாங்கம். பல விழிபுணர்வு அறிக்கைகளும் வந்து கொண்டுதான் இருக்கிறது, மக்கள் இதை எவ்வாறு புரிந்துகொண்டு நடந்து கொள்கிறார்கள் என்பது முக்கியம், அதே அளவு கொரோனா வைரஸை தடுக்க முடியும்.

இதை மிகவும் சரியாக புரிந்துகொண்ட ஒரு சாராய கடை கேரளாவில் உள்ளது, மக்களை பாதுகாப்பாக இருக்கு ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்க வைத்து ஒருவர் பின் ஒருவராக சென்று பாதுகாப்புக்காக குடிக்க அனுமதிக்க படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சி மிகவும் பாராட்ட படவேண்டிய ஒன்று.

இது ஒருபுறம் நகைச்சுவை போல் தெரிந்தாலும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவர்களை போல் அனைவரும் தங்கள் கடைகளுக்கு வருபவர்களை பாதுகாப்பாக நடத்தினார்கள் என்றால், கண்டிப்பாக வைரஸ் பாதிப்பை குறைக்கலாம்.

இந்தியா முழுவதும் மக்கள் அதிகம் கூடும் வணீக வளாகங்கள், தியேட்டர்கள், கல்லூரி, பள்ளி கூடங்கள், பத்து நபருக்கு மேல் தனியார் நிறுவனங்களில் பணியாளர்கள் இருந்தால், வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி, என பல நடவடிக்கைகள் இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தால் யாரும் பயப்படாமல், அருகில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம், கண்டிப்பாக குணமடைந்து வீடு திரும்பலாம்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை, கேரளா குடிமக்கள் பாராட்டிற்குரியவர்கள்