ads
கோவையில் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தும் காவல்துறை, ஊரடங்கு மே 2021
ராசு (Author) Published Date : May 18, 2021 14:42 ISTஇந்தியா
தமிழ்நாட்டில் காலை பத்து மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இருக்கும் நிலையில், மக்கள் நேர கட்டுப்பாட்டையும் மீறி அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றி திரிவதால், காவல்துறை கட்டுப்பாட்டை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வெளியில் சுற்றும் நபர்களிடம் உரிய ஆவணங்கள் இல்லை என்றால், காவல்துறை அதிகாரிகள் தங்களது செல்போனில் உடனடியாக வாகன எண்களை புகைப்படம் எடுத்து அபராதம் விதிக்கிறார்கள்.
கோவிட் நோய் தொற்று அதிகரித்து கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், மக்கள் அனாவசியமாக வெளியே வருவதை தவிர்த்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். மேலும் நோய் தொற்றை கட்டுப்படுத்த நினைக்கும் முன்கள பணியாளர்களுக்கு உதவியாக இருக்கும் என கண்காணிப்பு பணியில் இருக்கும் காவல் அதிகாரி கேட்டுக்கொண்டார்.