ads

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2025-26 கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ளதாக சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போது தேர்வு தொடங்கும் தேதி மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு பாடத்திற்கான தேதிகள் குறித்த விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வுகளின் முடிவுகள் அடுத்த ஆண்டு ஜூலை 15 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளன. வரும் 2026-ஆம் ஆண்டு பொதுத் தேர்வில், 45 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். எனவே, தேர்வுக்குத் தயாராக இருக்கும்படி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களை சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது