பிரபல தமிழ் நடிகர் விவேக், திடீர் உடல்நல குறைவால் சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் இன்று வெள்ளிக்கிழமை சில மணி நேரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்டார்.

அவரது மருத்துவ நிலை மோசமாக இருப்பதாக அவசர அறையில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடல்நிலை திடீரென மோசமடைவதற்கான மருத்துவ காரணங்கள் தெரியவில்லை.

நடிகர் விவேக் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கும் போது, மயக்கமடைந்துள்ளார், நாடி துடிப்பு இல்லை. அவரை உயிர்ப்பிக்க நாங்கள் எவ்வளவோ முயற்சி செய்கிறோம்" என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இவரது ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். நேற்று வியாழக்கிழமை, சுகாதார அதிகாரிகளுடன் தடுப்பூசி எடுக்கொள்ள வேண்டிய முக்கியத்துவம் குறித்து விளக்கினார் மேலும் பொதுமக்கள் பலரை தடுப்பூசி எடுக்க முன்வருமாறு வலியுறுத்தினார்.

ஏற்கனவே பொதுமக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தயக்கம் காட்டிய நிலையில், நடிகர் விவேக் அவர்களின் திடீர் உடல்நல குறைவு, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் ஒரு நல்ல காமெடி நடிகர் மற்றும் குணச்சித்திர நடிகர். இவர் தமிழகத்தில் பல இடங்களில் தன்னால் முடிந்த சமூக பணிகளை மேற்கொண்டுள்ளார், குறிப்பாக இயற்கையை காப்பாற்றும் வகையில், பல மாரா கண்டுகளை மக்களோடு நாட்டுளார்.

நடிகர் விவேக் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுகிறோம்.