ads

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி

தேமுதிக தலைவரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (டிசம்பர் 28) காலமானார்.

அவருக்கு சுவாச பிரச்சனைகள் இருப்பதாகவும், அவருக்கு கோவிட்-19 பாதிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இறுதிச்சடங்குக்காக தேமுதிக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், இன்று மாலை அலுவலகத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

பழைய வீடியோக்களில் இருக்கும் விஜயகாந்தின் பேச்சு, நடிப்பு சமூக வலைதளங்கள் நிரம்பி வழிகின்றன. அவரது மறைவுக்கு தமிழகம் முழுவதும் இரங்கல்: விஜயகாந்த் உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து காலை 6 மணிக்கு தீவுத்திடலுக்கு விஜயகாந்தின் உடல் கொண்டு செல்லப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மறைந்த விஜயகாந்துக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டிருந்த கண்ணாடிப் பெட்டியில் கைகளை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார் விஜய். பின்னர் பிரேமலதா மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் ஆறுதல் கூறினார். நடிகர் விஜய் மற்றும் விஜயகாந்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் இயக்கிய பல படங்களில் நடித்தவர் விஜயகாந்த். அன்றைய காலகட்டத்தில் உச்ச நட்சத்திரமாக இருந்த விஜயகாந்த், விஜய்யின்  ஆரம்பகால படங்களில் சிறு வேடங்களில் நடித்து, விஜயின் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடிகர் விஜய் கண்ணீர் அஞ்சலி