ads
கல்லீரல் பிரச்சனையுள்ள கர்ப்பிணி பெண்களா நீங்கள், முக்கியமாக செய்ய வேண்டியது
புருசோத்தமன் (Author) Published Date : Nov 12, 2019 12:05 ISTஆரோக்கியம்
கல்லீரல் பிரச்சனையுள்ள கர்ப்பிணி பெண்களா நீங்கள், முக்கியமாக செய்ய வேண்டியது: சமீபத்தில் நடந்த மருத்துவ ஆய்வில், கல்லீரல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகள் உடல் பருமன் அடைய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளனர்.
எண்டோகிரைன் சொசைட்டி 2019 மருத்துவ மாநாட்டில், டாக்டர் கரோலின் ஓவாடியா மற்றும் கிங்ஸ் லண்டன் கல்லூரியில் உள்ள இவரது குழுவினர் எலியின் மூலம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவின்படி - கல்லீரல் நோயால் ஒரு கர்ப்பணிப்பெண் பாதிப்படைந்து இருந்தால், கண்டிப்பாக இவர்களுக்கு பிறகும் குழந்தை நாளடைவில் அதிக பருமனுடன் வளரக்கூடிய வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கல்லீரல் பிரச்னையுள்ள பெண்கள் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொண்டால் குழந்தைகளின் நலனை சுலபமாக பாதுகாக்க முடியும். முடிந்த வரை உடல் பருமன் ஏற்படுத்தும் உணவு பொருட்களை கர்ப்பணிப்பெண்கள் தவிர்ப்பது நல்லது.