ads

பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் மூளை வளர்ச்சிக்கு தொடர்புடையது

பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் மூளை வளர்ச்சிக்கு தொடர்புடையது

பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் மூளை வளர்ச்சிக்கு தொடர்புடையது

பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் மூளை வளர்ச்சிக்கு தொடர்புடையது: புதிதாகப் பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் அழகானவை மட்டுமல்ல, மூளை வளர்ச்சியுடனும் சம்பந்தம் இருக்கிறது.

உங்கள் பிறந்த குழந்தை விக்கல் செய்யும்போது, ​​அதன் மூளை வளர்ந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இது லண்டன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு மற்றும் கிளினிக்கல் நியூரோபிசியாலஜி இதழின் சமீபத்திய வெளியீடு.

குழந்தைகள் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் விக்கல் செய்கிறார்கள், இதை வைத்து குழந்தையின் மூளை, சுவாசத்தைக் கண்டுபிடித்து மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

ஆனால் பெரியவர்களுக்கு, குழந்தைகளைப் போன்ற எந்தவொரு விக்கல்கள் உபயோகம் இல்லை.

புதிதாகப் பிறந்த குழந்தைகளின்  மூளை வளர்ச்சிக்கு உதவும் விக்கல்களைக் கண்டறிய இந்த ஆய்வு எவ்வாறு நடத்தப்பட்டது? லண்டன் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் புதிதாகப் பிறந்த 13 குழந்தைகளைக் கண்காணித்து,  மூளை வளர்ச்சியை தூண்டும் அலைகளை விக்கல்கள் அனுப்புவதை கண்டறிந்துள்ளனர். முப்பது முதல் நாற்பத்திரெண்டு வாரா குழந்தைகளை மூலம் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

எலக்ட்ரோட்களை குழந்தைகளின் உச்சந்தலையில் வைத்து, மற்றும் சென்சார்களை குழந்தைகளின் உடலில் வைப்பதன் மூலம், அவர்களின் மூளை வளர்ச்சிக்கு எவ்வாறு நடக்கிறது என்று ஆராய்ந்தனர். விக்கல்களின் போது, ​​குழந்தைகளுக்கு மூளை மூன்று அலைகளை உருவாக்கப்படுவதை கண்டறிந்துள்ளனர்.

மூன்றாவது மூளை அலை குழந்தைகளுக்கு விக்கல் ஒலியை ஏற்படுத்தி, உடல் சுருக்க உணர்வுடன் இணைக்க உதவுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

பிறந்த குழந்தைகளின் விக்கல்கள் மூளை வளர்ச்சிக்கு தொடர்புடையது