ads

முட்டையினால் இருதயத்திற்கு எவ்வித விளைவும் ஏற்படாது: ஆய்வில் தகவல்

முட்டை ஆய்வில் தகவல்

முட்டை ஆய்வில் தகவல்

உயர் கொழுப்பு பெரும்பாலும் இதய பிரச்சினைகளுடன்  இணைக்கப்படுகிறது. தமனி சுவர்களில் அதிகமான கொழுப்பு தங்குவதல்  இதய பாதிப்பு அல்லது இதய பக்கவாதம் ஏற்பட  முக்கிய காரணியாக உள்ளது.  கொழுப்பின் தேக்கத்தால்  இரத்தத்தின் ஓட்டத்தையும் சுழற்சியையும் தடுக்கிறது மேலும் இதயம் ரத்தம் இறைத்தலில் சிரமத்தை எதிர்கொள்ளக்கிறது. பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிபுணர்கள் உடலில் உள்ள கொழுப்பு அளவை அதிகரிக்கக்கூடிய  உணவுகளை பற்றி ஆலோசனை அளிக்கின்றனர்.

கொழுப்பு உள்ள உணவுகளில் முட்டையை கூறுகின்றனர். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவில் அதிகமான கொழுப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதய நோயாளிகள் முற்றிலுமாக முட்டையை தவிர்க்க வேண்டும் அல்லது வெள்ளை பாகத்தை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  ஆனால் முட்டையில் உள்ள பல்வேறு நன்மைகள் பெரிதாக காணப்படுவதில்லை. ஆரோக்கியமான உடலை பராமரிக்க பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது.

எனவே, இதய நோயை தடுக்க முட்டையை  முற்றிலும் முடக்கப்பட வேண்டுமா? என்ற கேள்விக்கு ஒரு ஆய்வு  எதிர்மறையாக பதிலளிக்கிறது.  கிழக்கு பின்லாந்தின் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு ஒரு நாளில் ஒரு முட்டை எடுப்பது அல்லது ஒரு மாத அளவு உணவுக் கொழுப்பு அளவை எடுத்துக்கொள்வது மூலம் இதய நோய் அபாயத்தை அதிகரிக்காது என்று ஆய்வு கூறுகிறது. மரபானு ரீதியாக ரத்தத்தின் நீர்த்த பகுதியில் உணவு கொழுப்பின் விளைவு இருப்பினும், தாராளமாக முட்டையும் அல்லது மிதமான கொழுப்பு உள்ள உணவு பொருட்களை எடுத்து கொள்ளலாம். APOE4 கேரியர்களால் கொலஸ்ட்ரால் வளர்சிதை மாற்றத்தில் எவ்வித இடையூறுகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆய்வின் மூலம் முந்தைய கண்டுபிடிப்புகளின் தவறை அம்பலப்படுத்தி உள்ளது. முந்தைய கண்டுபுடிப்புகளில் முட்டை உண்பதால் கொழுப்பின் அளவு அதிகமாவதும் அதனால் பக்கவாதம் போன்ற நோய்கள் ஏற்படுவதாகவும் கூறியிருந்தனர்.

1950 ஆம் ஆண்டை சார்ந்த 42 முதல் 60 வரையிலான ஆண்களின் உணவு முறையை கிழக்கு ஃபின்லான் பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்தனர். ஆராயப்பட்ட ஆண்களுக்கு எந்த வித இதய நோய் பிண்ணனி இல்லாமல் இருந்தனர். 1984-1989 காலகட்டத்தில் குபோபியோ இஸெமிக் இதய நோய் அபாய காரணியை ஆய்வு செய்வதற்காக ஆண்களை தேர்வு செய்தனர். 21 வருட காலப்பகுதியில், 217 நபர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்டனர், ஆனால் முட்டை எடுத்துக்கொண்டதால் அல்லது உணவுக் கொழுப்பினால் மாரடைப்பு ஏற்பட்டது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு முட்டை 200 மில்லிகிராம் கொழுப்புஅளவு உள்ளது.  ஆய்வில் பங்கேற்றவர்கள் ஒவ்வொரு நாளும் 520 கிராம் உணவுக் கொழுப்புகளை உட்கொண்டனர், இதில் முக்கிய பகுதிகள் முட்டைகளிலிருந்து வந்தன.  கார்டியோவாஸ்குலர் பிரச்சினைகள் உள்ளவர்கள் இன்னமும் கட்டுப்பாடான தொகையில் முட்டைகளை சாப்பிடலாம் மேலும் அவை பாதுகாப்பானது என்று ஆய்வு அறிக்கை கூறியுள்ளது

முட்டையினால் இருதயத்திற்கு எவ்வித விளைவும் ஏற்படாது: ஆய்வில் தகவல்