ads
பெண்கள் இதை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரும்
புருசோத்தமன் (Author) Published Date : Oct 14, 2019 22:47 ISTஆரோக்கியம்
பெண்கள் இதை சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வரும்: வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் மார்பக புற்றுநோய் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கருதப்படுகிறது.
அமெரிக்காவில், கிட்டத்தட்ட 12,000 மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், சீஸ் தயாரிப்புகளில் எச்சரிக்கை லேபிளை இணைக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (Food and Drug Administration) பரிந்துரைத்துள்ளனர்.
இந்த வாக்கியத்தை சீஸ் அட்டையில் அச்சிட பரிந்துரைத்துள்ளனர் "டைரி சீஸ் மார்பக புற்றுநோயை அதிகரிக்கும் ஹார்மோன்களை கொண்டுள்ளது".
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு லேபிள்களுக்கான கோரிக்கை அக்டோபர் 3 ஆம் தேதி, 2019 மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு திட்ட மாத தொடக்கத்தில் FDA க்கு (Food and Drug Administration) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கிலும் அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் சாப்பிடும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. பால், பாலாடைக்கட்டி போன்ற பால் உற்பத்தியில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் உயிரியல் ரீதியாக அதிக தன்மையுடன் செயல்படுகிறது; இதனால் பாலினால் ஆன பொருட்கள், அதிக அளவில் உட்கொள்ளும்போது, மார்பக புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
புகைபிடித்தல் கேடு விளைவிக்கும் என்பதைப்போல, புற்றுநோய்க்கான எச்சரிக்கை லேபிளைக் சீஸ் பாக்கெட்டின் மேல் அச்சிடி வேண்டும் என, மருத்துவ குழு FDA விடம் வலியுறுத்தியுள்ளது.
பால் மற்றும் மார்பக புற்றுநோயை மையமாகக் கொண்டு, அமெரிக்காவில் பல ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. பால், பாலாடைக்கட்டி, ஐஸ்கிரீம் போன்ற பால் பொருட்களை உட்கொள்ளும் பெண்களுக்கு 49% சதவீதம் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள தேசிய புற்றுநோய் மையம், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நடத்திய ஆய்வில், 53% சதவீதம் பெண்கள் அமெரிக்க கிரீம் சீஸ், செடார் சீஸ் மற்றும் மெக்கரோனி சீஸ் ஆகியவை உட்கொண்டவர்களாக இருந்திக்கிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயைக் கண்டறிய மேமோகிராம் பரிசோதனையை புறக்கணிக்க வேண்டாம் என்று மார்பக புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பேட் சாஜா "Pat Chaja" மற்ற பெண்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.