ads

ஆரோக்கியம்: கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சைவ உணவு முறையை தவிர்க்க வேண்டும்

சைவ உணவு முறை

சைவ உணவு முறை

ஆரோக்கியம்: பெல்ஜியத்தின் மருந்திற்கான "ராயல் அகாடமி" கடந்த வாரம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட செய்தியை பரிந்துரைத்துள்ளது. அதில் குழந்தைகள், இளம் வயதினர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் சைவ உணவை பின் பற்ற வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ளனர்.

பெல்ஜியத்தில் உள்ள 3 சதவீத குழந்தைகள் தாவரங்கள் மற்றும் தாவர பொருட்கள் மட்டுமே உண்கின்றனர். இறைச்சி, முட்டை, பால் பொருட்கள் மற்றும் பிற விலங்குகளில் இருந்து  தயாரிக்கப்பட்ட உணவுகளிலிருந்து விலகி, சைவ உணவு வகைகளை பின்பற்றுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கட்டுப்பாடான உண்ணும் திட்டம் தவிர்க்க முடியாத பல ஊட்டச்சத்து குறைபாடுகளை உருவாக்குகின்றது, மேலும் இதனை ஒழுங்காக கண்காணிக்கப்படாவிட்டால், குறைபாடுகள் மற்றும் பின்தங்கிய வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று அகாடமி அறிவித்துள்ளது. தேசிய மனித உரிமைகள் அமைப்பை சார்ந்த  பிரதிநிதி ஒருவர் மருத்துவ குறிப்பை கோரினர், மேலும் அவர் குழந்தை மருத்துவர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களுக்கு வழிகாட்டியாகவும் உள்ளார். பெல்ஜிய அரசு நிறுவனங்களுக்கான ஆலோசனை நிறுவனமாக ராயல் அகாடமி ஆஃப் மெடிசின் "Royal Academy of Medicine of Belgium" செயல்படுகிறது.

குயின் பாபிஒல குழந்தைகள் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்  "ஜார்ஜ்ஸ் காசிமிர்", சைவ உணவுகளை பற்றி அமைத்த குழுவின் தலைவராக உள்ளார். இக்குழு அகாடமியால் அமைக்கப்பட்டது. குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இவ்வகை உணவுகள் எடுத்து கொள்வதால் மீளாத தீங்குகள் பெறுகின்றனர் என்று மருத்துவர் கூறியுள்ளார். ஒரு சைவ உணவு உட்கொள்வதால் போதுமான புரதங்கள் மற்றும் வளரும் மூளைக்கு தேவையான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களின் கிடைக்காமல்  ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றது. மேலும் மருத்துவர் கூறுகையில், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12, கால்சியம், வளர்ச்சிக்கு தேவையான சுவடு கூறுகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவர உணவுகளை உண்ணும் மக்களுக்கு கிடைப்பதில்லை என்றார்.

இசபெல் திஇபாத் ஒரு ஐரோப்பிய அமைப்பின் தலைவரான இவர் சைவ உணவின் விளைவுகளை  கூறுகின்றார். பெற்றோர்களிடம் தெரிவிக்க வேண்டியது சைவ உணவு முறைகளை பின்பற்றும் குழந்தைகளுக்கு எடை இழப்பு மற்றும் உளச்சோர்வு தாமதங்கள், ஊட்டச்சத்து, இரத்த சோகை மற்றும் ஊட்ட சத்து குறைபாடுகள் ஏற்படும் என்றார். பெற்றோர்கள் புதிய பரிந்துரையை பின்பற்றவில்லை என்றால், ஒரு சைவ உணவுப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றும் பிள்ளைகள் அகாடமி படி, கூடுதல் உணவுகள், மருத்துவ சோதனை மற்றும் வழக்கமான இரத்தம் சோதனைகள் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினர். அனைத்து தரப்பு மக்களும் அகாடமி கூறும் அறிக்கையை ஏற்றுக்கொள்ளவதில்லை.

பிரிட்டிஷ் உணவுப்பழக்க அமைப்பு கூறுகையில், நன்கு திட்டமிடப்பட்ட தாவர அடிப்படையிலான, சைவ உணவுகளை ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அனைவருக்கும் அகாடமி அறிக்கையுடன் உடன்படவில்லை. பிரிட்டிஷ் உணவுப்பழக்க அமைப்பு கூறுகையில், நன்கு திட்டமிடப்பட்ட தாவர அடிப்படையிலான, சைவ உணவுகள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மற்றும் ஒவ்வொரு வயதிலும், வாழ்க்கை நிலைகளிலும் துணை புரிகிறது என்று கூறியுள்ளது. கிரேட் பிரிட்டனில் 600,000 சைவ உணவு உண்பவர்கள் உள்ளனர். இது 2018 மொத்த மக்கள் தொகையில் 1.2 சதவீதம் ஆகும் என இலாப நோக்கற்ற சைவ சமூகம் கூறியுள்ளார்.

திட்டமிட்ட சைவ உணவாளர்களின் உணவு முறைகள் எல்லாம் ஆரோக்கியமானதாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், மற்றும் சில நோய்களின் தடுத்து நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காகவும் உள்ளது என அமெரிக்க அமைப்பான ஊட்டச்சத்து மற்றும் டயட்டிக்ஸ் அகாடமி விளக்கியுள்ளது. கர்ப்ப காலம், பாலூட்டல், குழந்தை பருவம், சிறுவயது, இளமை பருவம், வயது வந்தோர் மற்றும் தடகள வீரர்கள் உட்பட வாழ்க்கை சுழற்சியின் எல்லா கட்டங்களிலும் இந்த உணவு முறை பழக்கம் உகந்ததாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதய நோய்கள், வகை 2 நீரிழிவு, சில வகையான புற்றுநோய் மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட குறைபாடுகள் தாவர உணவு உண்பவர்களுக்கு வர குறைவான வாய்ப்பு இருப்பதாக நிறுவனத்தின் நிலைப்பாடு கூறுகிறது.

ஆரோக்கியம்: கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சைவ உணவு முறையை தவிர்க்க வேண்டும்