5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் அஜித் யுவன் கூட்டணி





சிறுத்தை சிவாவின் 'விசுவாசம்' படத்திற்கு பிறகு நடிகர் அஜித் குமார் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கியுள்ளனர்.

இந்த படத்தின் பூஜையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மரியாதை செலுத்தியுள்ளனர். அஜித்தின் 59வது படமாக உருவாகவுள்ள இந்த படம் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக உருவாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகியுள்ளது.

இதன்படி இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்ற உள்ளார். ஏற்கனவே நடிகர் அஜித்தின் தீனா, பில்லா, பில்லா 2,மங்காத்தா, ஆரம்பம் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா மீண்டும் அஜித்துடன் 6வது முறையாக இணைந்துள்ளார். நீண்ட வருடங்களுக்கு பிறகு அஜித் படத்தில் பணிபுரியவுள்ளதாக யுவன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Latest Post