ads

இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் பிரபலங்கள் திரைப்படங்கள் ஒரு முன்னோட்டம்

 இந்த வார திரைப்படங்கள்

இந்த வார திரைப்படங்கள்

இந்த வார திரையரங்கில் படங்கள் வெளியாக தயாராக உள்ளது. மே மாதம் திரைப்படங்கள் பல சிக்கல்களை திரையரங்கை வந்தடைவதற்குள் சந்தித்து விடுகிறது. கோலிவுட் படங்கள் வெளியாவதில் தடைகள் ஏற்பட்டது. இந்த வாரம் மிஸ்டர்.லோக்கல், மன்ஸ்டர் மற்றும் நட்புனா என்னனு தெரியுமா போன்ற படங்கள் வெளியாக உள்ளது. 

மிஸ்டர்.லோக்கல்

சிவகார்த்திகேயன் கதாநாயகனாக, கதாநாயகியாக நயன்தாரா நடித்து ராஜேஷ் இயக்கத்தில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர்.லோக்கல்.  ட்ரைலர் வெளியான நிலையில் 20 லட்சம் பார்வைகள் கிட்டியுள்ளது. படத்தில் இடம்பெற்ற நட்சத்திரங்கள் ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதிஷ், ஹரிஜ, ரோபோ ஷங்கர் நடித்துள்ளனர். இந்த வரும் ரசிகர்களின் பலத்த எதிர்பார்புகளுக்கு இடையே வெளிவரவுள்ளது.

மான்ஸ்டர்

நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் போடன்சியல் ஸ்டுடியோ தயாரிப்பில் ஸ்.ஜே.சூர்யா மற்றும் பிரியா ஷங்கர் கதாநாயகன், கதாநாயகியாக நடித்துள்ளனர். இப்படம் குழந்தைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இயக்கப்பட்டுள்ளது. மனிதன் மற்றும் எலிக்கு நடக்கும் சம்பவங்கள் கருவாக கொண்டுள்ளது. ஸ்.ஜே சூர்யாவை வில்லனாக பார்த்த ரசிகர்களுக்கு இப்படத்தில் புது ஸ்.ஜே.சூர்யாவை பார்த்த அனுபவம் கிடைக்கும் என்று இயக்குனர் கூறியுள்ளார். இப்படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் மற்றும் கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ளார். குறைந்த நடிகர்களை கொண்டு படம் இயக்கப்பட்டுள்ளது.

நட்புனா என்னனு தெரியுமா 

இயக்குனர் சிவாகுமார் இயக்கத்தில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு மற்றும் பலர் நடித்துள்ளனர். தயரிப்பாளருக்கும், வினோகஸ்தருக்கும் இடையே நடந்த சச்சரவுகளுக்கு பின்னர் இந்த வாரம் படம் வெளியாக உள்ளது. இந்த வார திரைப்படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைகிறதா என்று பொறுதிருந்து பார்ப்போம். இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் பிரபலங்களின் திரைப்படங்கள்

இந்த வாரம் திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் பிரபலங்கள் திரைப்படங்கள் ஒரு முன்னோட்டம்